உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

3. தொல்காப்பியம்

எகுபதியர் சாலடியர் முதலான பண்டை மக்களின் நாகரிக முறைகளை யுணர்தற்கு அரும்பெருஞ் சான்றுகள் கிடைத்தாற்போலத், தமிழ்ப்பழ மக்களின் நாகரிக வரலாறுகளை அத்துணை உறுதியாய் அறிவிக்கும் பழைய மெய்ச்சான்றுகள் கிடைத்திலாமையின் அறியாமைப் பேரிருளிற்கிடந்து துன்புற்ற நாம், மூன்று திங்கள்காறும் ஒளி சிறிதும் இல்லாத் திணியிருளிற்கிடந்து பெரிது வருந்திய இந்நிலவுகத்து வ முனைக்கண் உள்ள மக்கள் அம் முழுவிருட் காலக்கழிவிற் சுடர்ந்து பேரொளி வீசி வானின்கண் துலங்கும் புத்தப்புதிய ஒரு பெருமின்னொளியினைக் கண்டு மகிழ்வதொப்ப, நம்முன்னோரின் அறிவுப் பெருவெளியில் அறிவொளி வீசித் திகழாநின்ற தொல்காப்பியம்' என்னும் முழுமுதல் நூலின் காண்டகுதோற்ற விளக்கத்தினைக் கண்டு களிப்பெய்துதற்கு உரியேம் அல்லேமோ! மற்றைப் பண்டை மக்களின் நாகரிக வரலாறுகளை முற்றும் உணர்தற்குக் கருவியாகாமல் அவற்றுள் ஒரு சிலவே யுணர்தற்குக் கருவியாய்க் கிடைத்த அவர் தங் கட்டிடங்களும் அவற்றிற் பொறித்த கல்வெட்டுக்களும் போற் குறைபாடுடையதன்றாய், நம் அருந்தமிழ் மக்களின் பெருந்திரு நாகரிகவரலாறு முற்றுமெடுத்து முடியக்கூறும் முழுமதியாய் ஒளிரும் நம் தொல்காப்பிய

நூலின்

ஒல்காப் பெருமாட்சியினைக் கண்டு களிக்கும் தவம் உடையேம் அல்லமோ! இற்றைக்கு ஆறாயிர ஆண்டுகட்கு முன்னமே, ஏனை நாகரிக மக்களெல்லாம் பெரும்பாலும் புறநாகரிகச் செல்வ மயக்கிற் கிடந்து தம்மையும் உணராமல் தாம் பிறவி யெடுத்த நோக்கத்தையும் உணராமல் தம்மையும் உலகத்தையும் படைத்த தலைவனையும் அவன்றன் திருவுளக்குறிப்பினையும் உணராமல் வாணாளை வீணாளாய்க் கழித் அஞ்ஞான்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/49&oldid=1592001" இலிருந்து மீள்விக்கப்பட்டது