உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

17

அப்புறநாகரிக மினுக்கினை அகநாகரிக அன்பொழுக்கப் பேரொளியின் முன்விளக்கமறச் செய்து, நம் முதுமக்களைப் பேரன்பாம் இன்பப் பெருக்கிற் படிவித்து ஒப்புயர்வில்லா மெய்ப்பெருந் தொல்காப்பிய நூற் றெய்வமாட்சியினைக் காண்டொறுங் காண்டொறுங் களிப்பெய்துதற்குரியம் அல்லமோ! இத்துணைச்சிறந்த தொல்காப்பியத் தெய்வ முதல் நூல், புறநாகரிகத்தை அகநாகரிகத்தின்கீழ் அடக்கிச், சாயம் அற்ற செல்வப் பொருளுக்கு அன்பின் எழில் துலங்கு சாயம் ஏற்றி, உயிரற்ற எற்புடம்பு போல்வதாகிய செல்வத்திற்கு அன்பென்னும் உரங்கிளர் உயிர் புகுத்திப், புறநாகரிகத்தை அகநாகரிகத்தின்வழி நடத்தி, நம் பண்டைத் தமிழ் மக்களின் ஒண்டமிழ் கொள்கையினை ஆய்ந்தாய்ந்து விளக்கிய அரும்பெரு வகைமையினை அடைவே சிறிது விளக்கிக் காட்டுவாம்.

அடிக்குறிப்பு

1. இதன் கால ஆராய்ச்சினை ‘மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்’ என்னும் எமது விரிந்த நூலிற் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/50&oldid=1592003" இலிருந்து மீள்விக்கப்பட்டது