உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

4. இன்பமும் பொருளும் அறனும்

இந்நிலவுலக வாழ்க்கையில் மக்களெல்லாரும் அடைதற் குரிய உறுதிப்பொருள்களை இன்பமும் பொருளும் அறனும் என்னும் மூன்றாக வகுத்து அம்மூன்றும் பிரிவின்றிக் கலந்த அன்பினால் ஊடுருவி நிற்றல் வேண்டுமென்பது தெளிவிப்பார்,

"இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

(களவியல் 1)

என்று ஆசிரியர் தொல்காப்பியனார் அருளிச் செய்தமை பெரிதும் நினைவிற்பதிக்கற்பாலதாகும். தொல்காப்பியத் தோடொத்த பழைமைவாய்ந்த இருக்கு எசுர் சாமம் முதலிய ஆரிய நூல்களினாதல், அல்லது ஏனைப்பழைய மக்களின் நூல்களினாதல், இன்பமும் பொருளும் அறனும் என்னும் இம்மூன்றும் அன்பின் வழியே அடையப்படுதல் வேண்டுமென நுவலப்படாமையினை உற்றுணர்ந்து பார்ப்பவர்க்கே அம்மூன்றும் அன்பொடு புணர்ந்து அடையப்படுதல் வேண்டுமென வற்புறுத்துரைக்குந் தொல்காப்பியனார் தம் உரைப்பொருண் மேன்மை நன்கு விளங்காநிற்கும். தொல்காப்பியனார் வழிவந்த ஆசிரியன்மாரில் தலைசிறந்தவரான தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்,

“அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு””

என்றும்,

66

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது

என்றும் அருளிச் செய்தமையும், அவர்க்குப்பின் வந்த சைவ சமயாசிரியரும், சைவநாயன்மாரும், அவர் தமக்குப் பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/51&oldid=1592005" இலிருந்து மீள்விக்கப்பட்டது