உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

19

இற்றைஞான்று வரை இராமலிங்க அடிகள் ஈறாக வந்த சைவப் பெரியாரும் எல்லாம் அன்பொழுக்கத்திற்கே தலைமை தந்தமையும் ஒரு தொடர்புபடுத்து நோக்குவோமாயின், தொன்றுதொட்டு இதுகாறும் நம் தமிழ்மக்களின் வாழ்க்கை யானது அன்பொழுக்கத்தினையே அச்சாணியாய்க் கொண்டு நடைபெறுவதென்பது தெளியப்படும். இதனைச் சைவ சித்தாந்த நூலாகிய திருக்களிற்றுப் படியாரும்,

"அன்பேஎன் அன்பேயென் றன்பால் அழுதரற்றி அன்பே யன்பாக அறிவழியும் - அன்பன்றித்

அன்பே தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை சாற்றும் பழமன்றே தான்”

என இறைவனை நோக்கிச் செய்யும் வழிபாடுகள் அத்தனையும் உண்மையன்பின் புற நிகழ்ச்சிகளாகச் செயற்பால தனை வற்புறுத்தாநிற்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/52&oldid=1592007" இலிருந்து மீள்விக்கப்பட்டது