உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

5. இன்பநிலை

னி, ஆசிரியர் தொல்காப்பியனார் மக்களடைவதற்குரிய உறுதிப்பொருள்கள் மூன்றில் ‘இன்பம்' என்பதனை முன்வைத்துக் கூறிய நுட்பம் இன்னதென நாம் ஆராய்ந்தறிதல் வேண்டும். பிறவியெடுக்கும்முன் தம் விழைவு அறிவு செயல்கள் முழுதும் மறைவுண்டு துன்புற்றும், அன்னையின் வயிற்றில் கருவாய்ப் புகுந்து பிறவி யெடுக்கின்ற காலத்து அங்கே மல நீர்ப் பைகளால் நெருக்குண்டு அகட்டுத் தீயினால் வெதும்பிப் பலவாறு துன்புற்றும், பின்னர் அன்னை வயிற்றை யகன்று பிள்ளையாய் பிறந்து பல்வகை நோய்களாலுந் தம்மைச் சூழ உள்ளார் செய்யுங் கொடுமைகளாலும் பெரிது துன்புற்றும் இங்ஙனமாகப் பிறவிக்கு வரும் முன்னேயிருந்து பிறவியெடுத்து ளமைப் பருவத்தை எய்துங்காறும் மக்கள் எல்லாரும் படுங் கொடுந்துன்பத்திற்கு ஓர் அளவேயில்லை. இவ்வாறு துன்பத் திலேயே பழகிவரும் ஏழைமக்களாகிய நாம் இன்பத்தின் இயல்பு இன்னதென ஒரு சிறிதாயினும் பழகி யறிந்திலமாயிற் பேரின்பப்பேற்றை அடைதற்கு நம்பால் விருப்பம் உண்டாகுமோ? உண்டாகாதன்றே; எந்நேரமுந் துன்பத்திலேயே கிடந்துழலும் மக்களில் எத்தனைபேர் இவ்வுலக வாழ்க்கையினை வெறுத்து ஐயோ தம்முயிரைச் சடுதியில் மாய்த்துக்கொள்கின்றனர்! மண்டைவலி வயிற்றுவலி இடுப்புவலி முதலிய கொடு நோய்களால் ஓவாது துன்புற்றுத் துடிதுடிப்போரிற் பற்பலர் தம்முயிரைத் தாமாகவே மாய்த்துக் கொள்ளுதலை அடுத்தடுத்துச் செய்தித் தாள்களால் அறிந்து திகில் காள்கின்றனர் அல்லமோ! நல்வினை வயத்தாற் சுவையான உணவுகளை யுண்டுங், கண்ணாரப் பல காட்சிகளைக் கண்டும், இனிய இசைகள் அரிய விரிவுரைகள் கேட்டும், அரும்பெரு நூல்கள் கற்று அறிவு தெளிந்தும், நறுமணம் அளைந்தும், இவ்வாறெல்லாம் ஐம்புலன்களின் வாயிலாக வரும் பலதிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/53&oldid=1592009" இலிருந்து மீள்விக்கப்பட்டது