உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

21

இன்பங்களை நுகர்ந்து மகிழ்தலினாற்றான், மக்களுயிர் இளமைப் பருவம் எய்தும் வரையிலாது இந்நிலவுகத்தே நிலவுகின்றது! நாம் பிறவியெடுக்கும் முன்னமே இறைவன் இவ் ஐம்புல இன்பங் களைத் தரும் பல்வகைப் பண்டங்களை இங்கு அமைத்து வைத்திலனாயின், நாம் ஒரு நொடிப் பொழுதாயினும் இங்கே உயிர்வாழ்தல் இயலுமோ? கூர்ந்து பார்மின்கள் அன்பர்களே! இவ்வைம்புல நுகர்ச்சிப்பொருள்களும் வாய்ப்பாக நன்கு அமைக்கப்பட்டிருத்தலினாலேதான் பலகோடிக் கணக்கான பல்வகை மக்கட் பிரிவினர் தம் உயிர்வாழ்க்கையும் இந் நிலவுலகத்தின்கண் ஆங்காங்கு நடைபெறா நிற்கின்றது.

இனி ஐம்புல நுகர்ச்சிகளால் வரும் இன்பத்தளவில் மக்களுயிர் அமைதிபெறுங் காலம் எவ்வளவு? பெண்மக்களாயின் மங்கைப்பருவம் எய்தும் வரையிலும், ஆண்மக்களாயின் இளமைப் பருவம் எய்தும் வரையிலுமோ மற்று அப்பருவம் வந்த அளவிலோ, அதுகாறுங் காணக்கிடையா வேறொரு மகிழ்ச்சிக் கிடமாம் வேறொரு புதுதேயத்தைக் கண்டா லொப்பப், புதியதோர் இன்ப ன்ப உணர்ச்சி வரப்பெற்று அவ்வின்பத்தைப் பெறுதலில் இருவருயிரும் பெருவேட்கையும் பெருமுயற்சியும் உடையவாகின்றன. அதுவரையில் நுகர்ந்து வந்த ஐம்புல இன்பங்களெல்லாம், இப்போது தோன்றாநின்ற இப்புதிய இன்பத்தின்முன் நில்லாவாய், அதனிற் றாழ்ந்தவாய், அதனைப் பெறாதவழி அதனால் ஏக்கமுறுவார்க்குத் துன்பந் தரும் பெற்றியவாய் மாறிவிடக் காண்கின்றோம். இவ்வாறு இளமைப்பருவத்தில் ஆண் பெண் என்னும் இருபாலார்க்குந் தோன்றுவதாகிய இன்ப வுணர்ச்சியானது, அழகு அறிவு நல்லியற்கையினால் உந்தப்பட்டு எழும் அன்பின் வயமாகி ஒருவரை யொருவர் இன்றியமையாராய் ஒருங்கு பொருந்தும் ஆண் பெண் மக்களுக்கு அவ்விழுமிய காதலின்பத்தினை ஊட்டி, அவரது வாழ்க்கையைத் தூய்மை செய்து அதனைப் பெரிதும் பயன்படச் செய்வதாகும். இக்காதலின்ப உணர்ச்சி தோன்றுதற்கு முன்னெல்லாம் பிள்ளைமைப் பருவத்திலுள்ளார் தாந்தாம் பெற்ற ஐம்புல இன்பப் பொருள்களைத் தாந்தாமே நுகர்வதிற் கருத்துடைய ரன்றித், தம்மோ டொத்த மற்றைப் பிள்ளைகட்கு அவற்றை எளிதிற்கொடார்; தாம் நுகர்ந்து மிஞ்சிய மிச்சந் தமக்கு வேண்டாதிருந்தால்மட்டும், அதனை னைச் சிறுவர்க்குக் கொடுக்க ஒரோவொருகால் மனம் ஒருப் படுவர்; என்றாலுந், தாம் நுகர்ந்து கழித்த மிச்சத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/54&oldid=1592011" இலிருந்து மீள்விக்கப்பட்டது