உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

-30

மறைமலையம் - 30

பிறர்க்குக் கொடுக்க மனம் இசையாத சிறாரே உலகிற் பெரும் பாலார். இவ்வாறாகத், தன்னலம் ஒன்றே கருதும் பிள்ளைமைப் பருவந் தாண்டி, இளமைப்பருவம் புகுந்து, காதலின்ப உணர்ச்சி வயத்தராய் ஓராண்மகனும் ஒரு பெண்மகளும் ஒருவர்பா லொருவர் மிக்க அன்பு மீதூரப்பெற்று ஒருங்கு பொருந்திய காலந் தொட்டோ, கணவனாயினான் தன்நலங் கருதுதல் விட்டுத் தன் மனைவியின் நலங் கருதுவானாய், அவட்கு வேண்டும் நுகர் பொருள்களெல்லாந் தொகுத்துக் கொடுக்கும் பொருட்டு முயலும் பல்வகை முயற்சிகளால் உலகத்திற்குப் பெரிதும் பயன்படுகின்றான்; அங்ஙனமே மனைவியாயினாளுந் தன்னைப் பேணுங் கருத்தை விட்டுத் தன் கணவனையே தன்னுயிராகக் கருதி அவனை ஓம்புதலிலுந்; தம் அன்பின் சேர்க்கையாற் பிறக்கும் இன்பக் குழவிகட்குத் தான் வரைந்து வைத்தவைகளை யெல்லாங் கொடுத்து அவரைக் கண்ணுங் கருத்துமாய் போற்றி வளர்த்தலிலும் அருளொழுக்க முடைய அறவோர்க்கு வேண்டுவ கொடுத்தலும் அன்பொழுக்கமுடைய அறவோர்க்கு வேண்டுவ கொடுத்தலும் அந்தணரைக் காத்தலும் துறவினரை ஏற்று அவர்க்குத் தொண்டு புரிதலும் விருந்து வருவாரை ஓம்புதலுமாகிய அறம்புரி வாழ்க்கையிலுந் தலை நின்று இம்மண்ணுலக வாழ்க்கையினை விண்ணுலக வாழ்க்கையெனப் புனிதமாக்கித் தானும் மிகப் பயன் படுகின்றாள்.பார்மின்கள் அன்பர்களே! இங்ஙனம் ஆண்பெண் என்னும் இருபாலாருங் காதலின் உணர்ச்சி வயத்தராய் ஒருங்கு இயைந்தமையாலன்றோ, அவர் தாமும் இன்புற்றுப் பிறரையும் இன்புறுத்திப், பிறவிக்கு வராமல் அருவநிலையில் அறியாமை யால் விழுங்கப்பட்டுக் கிடந்த உயிர்கள் உருவநிலையில் தம்பாற் பிள்ளைகளாய்ப் பிறவி யெடுத்து அறிவும் இன்பமும் பெறப் பேருதவிபுரிந்து அவ்வாற்றால் இறைவன்றன் அருட்செயற்கு ஓர் ஒப்பற்ற கருவியாய்ப் பயன்பட்டு வருகின்றனர். இக்காதலின்ப உணர்ச்சியும் அதற்கேற்ற அமைப்பும் மக்கள்பால் இல்லை யாயின், இவ்வுலகம் எங்கே! இவ்வுலகில் நடைபெறும் ஒழுக்கங்கள் எங்கே! யார் எவர்க்கு உறவு! யார் எவர்க்குத்

துணை! எல்லாம் வறும் பாழாய் முடியுமன்றோ? எவ்வாற்றால் ஆராய்ந்து பார்ப்பினும் இக்காதலின்பமானது உடம்புக்கு உயிர்போல்வதாய், இருள்நிறைந்த இரவில் இருளகற்றும் முழுமதி போல்வதாய்ப், புற்பூண்டுகள் முதல் நிலையியற் பொருள்களும் விலங்கு புள் மக்கள் முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/55&oldid=1592013" இலிருந்து மீள்விக்கப்பட்டது