உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

23

இயங்கியற் பொருள்களும் அறிவும் முயற்சியும் பெறச் சுடரொளி பரப்பும் ஞாயிறு போல்வதாய், அறியாமையாற் சினத்தாற் பொறாமையால் இறுமாப்பால் ஒருவரோ ாருவர் அளவளாவுதல் இல்லாத மக்களை அளவளாவப் புகுத்தும் இறைவன்றன் அருள்விளக்கம் போல்வதாய் முதன்மை பெற்று வயங்குதல் கண்டனறோ தவத்தான் முற்றுணர்வு வாய்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார் “இன்பமும் பொருளும் அறனும்” என இன்பத்தை முதல் நிலைக்கண் வத்து ஓதுவாராயினர்.

இம்முதலாசிரியர்க்குப் பின்வந்த தமிழாசிரியர்கள், உலகியலொழுக்கத்திற்கு முற்றும் மாறான பௌத்த சமண சமயக் கொள்கைகளாற் சிறிது சிறிது ஈர்ப்புண்டு,

“சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல'

و,

என அறத்திற்கே முதல்நிலை கூறினாராயினும், திருவள்ளுவ னாரும் அறத்தை முன் வைத்துப்பொருளை அதன் பின் வைத்து இன்பத்தை இறுதிக்கண் வைத்து நூல் செய்தாராயினும், ன்பத்தை நுதலியன்றி அறஞ்செய்வாரையும் பொருள் செய்வாரையும் யாண்டுங் கண்டிலமாகலின், தொல்காப்பிய னார் இன்பத்தை முதல்வைத்த முறையே மக்களியற்கையொடு பொருந்துவதாதல் நன்கு துணியப்படும்.தமது காலப்போக்கினை யொட்டித் திருவருள்ளுவனார் அறத்தை முன்வைத்து இன்பத்தை இறுதிக் கண் வைத்து நூலியற்றப்புகுந்தனராயினும், இன்பத்தை வாயிலாகக்கொண்டன்றி அறனும் இல்லறந் துறவறம் என இரண்டாகப் பகுத்து, காதலின்பத்தின் வழிப்படுவதாகிய இல்லறத்தையே முதற்கண் வைத்து நூல் அருளிச் செய்தனர். அவ்வாற்றால் ஆசிரியர் தொல்காப்பியனார் கொண்ட ஆ முறையே நன்முறையென்பது திருவள்ளுவனார்க்கும் உடம் பாடாதல் பெறுதும். இஃது அவர் இல்லறவியலின்

முதலதிகாரத்தில்,

66

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்

பண்பும் பயனும் அது

என அன்பை முன்வைத்து அறனை அதன்பின் வைத்துத் தெளித்தோதியது கொண்டும் இனிது பெறப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/56&oldid=1592015" இலிருந்து மீள்விக்கப்பட்டது