உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

6. இன்பம் அன்பினால் நிகழ்வது : கற்பு

த்துணைச் சிறந்ததாகிய இன்ப வாழ்க்கை அன்பினால் உந்தப்பட்டே நடைபெறல் வேண்டுமென முதல் ஆசிரியர் வலியுறுத்தியவாறு போலவே, தெய்வத் திருவள்ளுவரும்,

“அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றார் எய்துஞ் சிறப்பு”

என்று உடம்பாட்டானும்,

66

'அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரந்தளிர்த் தற்று”

என்று எதிர்மறையானும் அன்பின் இன்றியமையாமையினை விளங்க வைத்தது காண்க. மதுரைக் கடைச்சங்க காலத்துக்கும் முன்னே பண்டைச் செந்தமிழ்க் காலத்திருந்த குன்றம் பூதனார் என்னும் நல்லிசைப் புலமை மலிந்த சான்றோருந் தாம் முருகவேள்மேற் பாடிய "இருநிலந் துளங்காமை” என்னும் பரிபாடலிலும்,

“நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற் காமங் காமத்துச் சிறந்தது”

என்று காதலின்பத்தின் மாட்சி தெரித்து, அவ்வின்ப நுகர்ச்சி இறைவனது தண்பரங்குன்றத்தின்கண் நிகழுமாற்றின் வைத்து அதனை விரித்துப் பாடினார்.

பாருங்கள் அன்பர்களே! உலகிய லொழுக்கத்திற்கும் இறைவன் திருவடிப் பேற்றிற்கும் ஆணிவேர்போல் இருப்ப தாகிய இவ் இன்பவொழுக்கமானது மெய்யன்பின் வழி நடக்குமாயின் அப்போதுதான் அது காதலின்பம்' என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/57&oldid=1592017" இலிருந்து மீள்விக்கப்பட்டது