உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

25

உயர்த்துப் பேசப்படுமென்பதும், அஃது அங்ஙனம் அன்பின் வழி நடவாதாயின் இழிந்த காமம் என இழித்துப் பேசப்படு மென்பதும் நம் செந்தமிழ்த் தெய்வ ஆசிரியர் எல்லார்க்கும் ஒத்த முடிபா யிருக்கின்றன. ஏனென்றால் ஓராண்மகனும் ஒரு பெண்மகளுந் தம்மில் ஒருவரை யொருவர் உயிர்போற் கருதி நிரம்பிய அன்பால் ஒழுகினாலன்றிப், பெண்பாலார்க்குக் கற்பொழுக்கம் நிலைபெறாது கற்பொழுக்கம் நிலைபெற தாயின் நன்மக்களைப் பெறுதலும் உளதாகாது; உலகில் ருவரோடொருவர் அமைதியாயிருந்து வாழாமற் பகைமையுஞ் சினமுங் கொண்ட அல்லல் உழப்பர்; அதனாற் றெய்வ நம்பிக்கையுந் தெய்வ வணக்கமும் இல்லையாய்ப் போம்; எங்குங் குடியுங் கொலையும் கொடுமையும் மலிந்து மக்கள் வாழ்க்கையானது சின்னபின்னமாய்ச் சிதறிவிடும். இத்தகைய குடிகே ான சயல் ருஷியா முதலான மேனாடுகளிற் பரவி அங்குள்ள மக்களை நினைப்பினுங் காடிய துன்பத்திற் படுத்துத் தேய்த்துவரும் நிலையினைச் சிறிதாயினும் அழுந்தியறியவல்லார்க்கே, நம் செந்தமிழ்த் தெய்வ ஆசிரியர் வற்புறுத்திச் சொல்லிய காதலின்ப வாழ்க்கையின் விழுப்பம் புலனாகால் நிற்கும். மற்றுக் காதலன்பின்வயமாகி மணங் கூடினார்க்கோ ஒருவரைவிட்டுப் பிறரொருவர் மேல் உள்ளஞ் செல்லாதாகலின், அவர்க்குக் கற்பொழுக்கந் தானாகவே நிலைபெறும்; அவர்க்குக் கற்பொழுக்கத்தினைக் கற்பிக்க வேறெவருமே வேண்டப் படார். அவர், தாம் காதல் கொண்ட அன்பரை யன்றிப் பிறரெவரையுங் கருதமாட்டாமையால், தம் கருத்தறியாமல் தம்மைப் பிறரொருவர்க்கு மணம் புகுந்த எவரேனும் முனைகுவராயின், அவர்க்குத் தமதுள்ளக் கருத்தைப் புலப்படுத்தித் தமது கற்பொழுக்கத்தினை நிலைநிறுத்திக் கொள்வர்; அதுவும் வாயாதாயின் தமதுயிரையே துறப்பரன்றித் தமது கற்பிற் சிறிதும் வழுவார்; தம் காதலர் இறந்துபடின் தாமும் உயிர் தாங்கார். இத்தன்மையராகிய பண்டைத் தமிழ் மாதரின் கற்பொழுக்க மாட்சியினைப், பழந்தமிழ் நூல்களிற் போந்த சில பாட்டுக்களை எடுத்துக்காட்டி ளக்குதும்; முதலிற் கலித்தொகை என்னும் அரிய சங்க நூலிற் காணப்படும் ஒரு செய்யுளை இங்கெடுத்துரைப்பாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/58&oldid=1592019" இலிருந்து மீள்விக்கப்பட்டது