உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மறைமலையம் - 30

-

“சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில்நாம் ஆடும் மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நாள் அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே! உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற் கன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய் உண்ணுநீர் ஊட்டிவா வென்றாள், எனயானும் தன்னை யறியாது சென்றேன் மற்றென்னை வளைமுன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு அன்னாய் இவனொருவன் செய்ததுகாண் என்றேனா,

அன்னை யலறிப் படர்தரத், தன்னையான்

உண்ணுநீர் விக்கினான் என்றோனா, அன்னையுந்

தன்னைப் புறம்புஅழித்து நீவ, மற்றென்னைக்

கடைக்கண்ணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டஞ் செய்தான் அக்கள்வன் மகன்.””

தன்னைப் பிறனொருவனுக்கு மணம் பொருத்தக் கருதித் தன் பெற்றோர் செய்யும் ஏற்பாடுகளைக் கண்டு திகில் கொண்டவளான அழகு மிக்க ஒருகற்புடை மங்கை, தான் ஒருவன் மேற் காதல்கொண்டிருக்குங் குறிப்புத் தன் தோழிக்குப் புலனாம்படி சொல்லுதலை இச்செய்யுள் எடுத்தியம்புகின்றது; இதுகேட்டுத் தன் தலைவியின் காதற் குறிப்பறிந்த தோழி அவடன் பெற்றோர்க்கு அதனை அறிவித்து அவள் காதலித்த இளைஞனுக்கே அவளை மணங்கூட்டுவள். இதனை ‘அறத்தொடு நிற்றல்' என்பர் பொருளிலக்கணத்தில், இச்செய்யுட் பொருள் வருமாறு:-

66

ளங்கா நின்ற தொடியணிந்த தோழீ! என்மனத் ள்ளதனைக் கேட்பாயாக! தெருவிலே நாம் மணலாற் சமைத்து விளையாடுஞ் சிறிய வீட்டினைக் காலால் எற்றி அழித்தும், நமது கூந்தலிற் செருகிய பூமாலையை அறுத்தும், வரிந்த நமது பந்தினை எடுத்துக்கொண்டோடியும் நாம் மனம் நோவத்தக்க குறும்புகளைச் செய்யும் அந்தச் பட்டிப்பையன், முன் ஒரு நாள் நம் அன்னையும் யானும் வீட்டின்கண் இருந்தேமாக, எம்பாற்போந்து, 'வீட்டில்

சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/59&oldid=1592021" இலிருந்து மீள்விக்கப்பட்டது