உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

27

உள்ளீரே! உண்ணப்படுந் தண்ணீர்க்காக விடாய் கொண்டு வந்தேன்' என்று சொல்லிவந்து நின்றனுக்கு, அன்னையானவள் என்னை நோக்கிச் 'சுடரிழாய்! பொற்றகட்டாற் செய்த கரகத்தால் உண்ணுநீரை முகந்து சென்று வார்த்து அதனை அவன் பருகச்செய்துவா' என்று கூறினாள். கூறவே யானும் அவனைப் பட்டிப் பையன் என்று நிலையாமலே அன்னை சொன்னபடியே செய்ய அவன்றன்பாற் சென்றேன்; ஆனால் அவன் வளையல் அணிந்த எனது முன் கையினைப் பிடித் திழுத்து வம்பு செய்யவே, யான் மனம் மருண்டு ‘அன்னாய்! இவன் ஒருவன் செய்ததைப் பாராய்!' என்று கூவினோனாக, உடனே அன்னை அலறிக் கொண்டு என்பால் வருதலும், சடுதியில் யான் மனந்தெளிந்து 'இவன் உண்ணுநீரைப் பருகும்போது விக்கிவருந்தினான்' என்று அவன் செய்ததனை மறைத்து மொழிந்தேன்; அது கேட்டு அன்னையும் அவன் முதுகைப் பலகாலுந் தடவினாள்; அப்போது என்னைக் கடைக்கண்ணாற் கொல்வான் போல் நோக்கி, மகிழ்ச்சிக்கு ஏதுவான மனத்தைக் கள்வனாகிய அவ்விளைஞன் முன்னமே செய்தனன்; இதனை அறிவாயாக!"

பார்மின்கள் அறிஞர்களே! கற்பிற் சிறந்த இளைய தமிழ் மங்கை ஒருத்தி தன்னிளமைக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் வைத்துத் தான் ஓர் இளைஞன்மேற் காதல் கொண்டமையினை எவ்வளவு நுட்பமாக, எவ்வளவு திறமையாக, எவ்வளவு மனக்கவர்ச்சியுண்டாகத் தான்கொண்ட அக்காதற் கற்பொழுக்கத்திற்குப் பழுதுவாராமற் கூறுகின்றாள்! தான் ஏதும் அறியாப் பேதைப் பெண்ணாய் இருந்த காலத்திலேயே தன் உள்ளம் ஓரிளைஞன்பால் அன்பிற் பதிந்தமையும், தான் இழைத்த மணல் வீட்டினைக் காலால் எற்றியுந் தன் கூந்தலிற் சருகிய மாலையை அறுத்துந் தான் ஆடும் பந்தினை எடுத்துக் கொண்டோடியும் அவன் தான் வருந்தத்தக்க குறும்புகள் செய்தும், அக்குறும்புகள் அத்தனையுந் தன்பால் வைத்த அன்பினாலேயே அவன் செய்தமையும், அதனால் அக்குறும்புகள் தன்மனம் நோவச்செய்தனபோற் றோன்றினும் உண்மையில் அவை தன்னை நோவச் செய்யாமையும், சிறுபட்டி' என அவனைத்தானே சுட்டுஞ் சொல்லே அவன்பால் தனக்குள்ள அன்பின் அறிகுறியாதலும், விடாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/60&oldid=1592023" இலிருந்து மீள்விக்கப்பட்டது