உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

  • மறைமலையம் லயம் - 30

தன்

கொண்டு வந்தானெனினும் இளைஞனான ஒருவற்குத் தான் தனியே சன்று விடாய் தணித்தல் நாணு L ய பெண்டன்மைக்கு ஏலாமையின் அன்னையுந் தானும் இருந்தக்கால் அவன் விடாய்த்து வந்தானென்றமையும், அங்ஙனம் அன்னையோடு இருந்தவிடத்தும் அன்னையின் ஏவுதலாலேயே தான் நீரெடுத்து அவன்பாற் சென்றுமையும், அவன் தன்பால் வைத்த காதற்கிழமையால் தன் கையைப் பிடித்து வம்புசெய்யினும் அதற்கு எளிதிலே உடன்பட்டிருத்தல் அச்சமும் நாணமும் இயற்கையே வாய்ந்த தன் பண்டன்மைக் கு ஏலாமையின் அதற்கிசையாது அன்னையைக் கூவியழைத்தமையும், அன்னை அருகுவந்ததும் அதுபற்றி அவனை அவள் சினவாமைப் பொருட்டு ‘அவன் உண்ணுநீர் விக்கினான்’ என அவன் செய்த குற்றத்தை அவன்மேலுள்ள காதலால் தான் மறைத்து மொழிந் தமையும், அன்னையும் அவன்றன் எழில் நலங் கண்டு அவன் விக்குதல் பொறாயாய் அவன்றன் முதுகினைத்தடவிக்கொடுத்தா ளென்றமையும், அப்போது தான் செய்ததனை ஒரு குறும்பாக நினைந்து அவன் தன்னைக் கடைக்கண்ணாற் பார்த்துச் சினந்தமையும் எல்ாம் அவ் அறிவுடைக் கற்பரசி எத்துணை நயமாகத், தன் உயர்ந்த பெண்டன்மைக்கு எத்துணை இசைவாக, இங்ஙனஞ் சின்னஞ் சிறிய பருவம் முதலே தான் கொண்ட காதற் கற்பொழுக்கம் எத்துணைச் சிறந்ததென்பது புலனாகக் கூறியிருக்கின்றாள் அத்துணை விழுமிய காதற் கற்புடைத் தமிழ் மக்கள் வழி வந்த நம் இவ் வருமையினைக் கனவினும் நனவினும் நினைந்து நினைந்து வியக்கற்பால மல்லமோ!

இத்துணைச் சிறந்த பண்டைத் தமிழ்மாதரின் காதற் கற்பொழுக்கத்தை எடுத்துரைக்கும் இத் தமிழ்ச்செய்யுள் வழக்கும் பாராட்டற் பாலதா யிருக்கின்றது. வான்மதி மண்டில ஞாயிற்று மண்டிலங்களினும் மேலுயர்ந்து செல்லுங் கூட கோபுர மாளிகைகளைக் கற்பித்து, நேரிற் சென்று பார்த்தால் ஒரு சில குடிசைகளே யுள்ள ஓர் ஊரில் அக்கட்டிடங்கள் உளவாக மனக்கோட்டை கட்டி, அக்கட்டிடங்களின் மேலடுக்கு களில் உள்ளவராக மாதர்களை இருத்தி அம்மாதரின் முடிமுதல்அடிகாறும் உள்ள ஒவ்வொர் உறுப்புகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/61&oldid=1592025" இலிருந்து மீள்விக்கப்பட்டது