உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

29

பற்பல செய்யுட்களால் அழகு படுத்திப்பாடி, இங்ஙனமே இன்னும் இல்லாத பொய்களை யெல்லாம் ஏராளமாய்ப் புனைந்து கட்டிச் சொல்லும் இக்காலத்தார் செய்யுள்வழக் கெங்கே! உள்ளவாறே எடுத்தியம்பிச், சிந்தும் பிழைபடா தெழுதிய ஓவியம் போல்வதாகிய பழந்தமிழ்ப் புலவரின் செய்யுள் வழக்கெங்கே! இவ்விரண்டிற்கும் உள்ள வேறு பாட்டினைக் கம்பராமாயணச் செய்யுளோடு இக்கலித்தொகைச் செய்யுளைச் சிறிது ஒப்பிட்டு டு நோக்குவீர்க்களாயின் நன்கறிவீர்கள். அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/62&oldid=1592027" இலிருந்து மீள்விக்கப்பட்டது