உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

7. தமிழ் மாதரின் கற்பு

னிப், பண்டைக் காதற் கற்பொழுக்க மாதர் தங் கணவர் இறந்துபட்ட ஞான்றே, அவர்தம் பிரிவினை ஆற்றாராய் ஏங்கி உயிர்துறந்த நிகழ்ச்சிகளும் பல. இவ்வாறு நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியினைப் புறப்பொருள்வெண்பாமாலையிற் போந்த,

“ஓருயிராக உணர்க உடன் கலந்தார்க் கீருயிரென்பர் இடைதெரியார் - போரில்

விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையினாட்கும் உடனே உலந்த துயிர்”

என்னுஞ் செய்யுள் கூறாநிற்கின்றது. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தமையால் அவர் அவற்றிற்கு 'மூதானந்தம்' எனப் பெயரிட்டு, அதன் இலக்கணமுங் கூறினார், தன் காதற்கணவன் கோவலனை இழந்த கண்ணகி பட்ட துயரினை நினைப்பிற் கன்னெஞ்சமுங் கரையு மன்றோ? அவள் தன் கணவனைக் கொலை செய்வித்த பாண்டியனுக்கு அறிவு தெருட்டிப் பதினான்காம் நாள் தன்னுயிரினைத் துறந்து தன் கணவனுயிரொடு வானுலகுசென்ற ஆற்றருங் காட்சியினைக் குறவருங் கண்டன ரல்லரோ?

இனித், தன்கணவன் பூதப்பாண்டியன் மாய்ந்த ஞான்று அவனைப் பிரிந்த துன்பம் பொறாளாய் அவன்றன் காதன் மனைவி பெருங்கோப்பெண்டு தீப்பாயச் சென்ற வழி, அவ்வாறு செய்தலாகாதென விலக்கிய சான்றோர்க்கு அவள்,

“பல்சான்றீரே! பல்சான்றீரே!

செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்

பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே!

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட

காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/63&oldid=1592029" இலிருந்து மீள்விக்கப்பட்டது