உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

31

அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்

வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை வல்சி யாகப்

பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்

உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்

பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பற

வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை

நள்ளிரும் பொய்கையுந் தீயும் ஓரற்றே”

என்று செய்யுளாகவே விடை கூறிய நிகழ்ச்சி நம் தமிழ் நங்கையாரின் காதலன் பின் மாட்சியினை மலைமேல் வைத்த விளக்குப்போல் உலகெங்கும் விளங்கச் செய்கின்றதன்றோ?

இவ்வாறாகத் தம் உயிரையும் ஒரு துரும்பாகக் கருதி நந்தம் தமிழ்ப் பெருமாட்டிமார் தம் காதலர் மடிந்த வழித்தாமும் உடன் மடியுமாறு அவரை அவ்வாறு ஏவியது எது அவர் தங் கொழுநர் பால் வைத்த ஒப்புயர்வற்ற காதலன் பன்றோ? எனவே, மாதர்க்குச் சிறந்த கற்பொழுக்கமாவது அவர்தங் காதலன்பின் பயனாய் அவர்பால் இயற்கையில் உளதாவதே யன்றிப், பிறர்க்கு அஞ்சியும் பிறர் கூறம் அறிவுரை கேட்டும் வருவதன்றென்பது புலனாகின்றதன்றோ இங்ஙனம் இயற்கை யொழுக்கமாய் வரற்பாலதாகிய கற்பிற்குக் காதலன்பு ஒன்றுமே சிறந்த ஏதுவாயிருத்லைப் பல படியாலும் மக்களியற்கையில் வத்து ஆராய்ந்து கண்டமையாலன்றோ

தொல்காப்பியனார்,

66

என்று

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு, அன்பொடு புணர்ந்த ஐந்திணை’

ஓதியருளினார்,

அம்முதலாசிரியர்

ஆசிரியர்

வழிவந்த

திருவள்ளுவர் முதலான சான்றோரும் அங்ஙனமே அஃது அன்பின் வழி நடக்கற்பாற்றென்று பண்டு தொட்டு இன்று காறும் வலியுறுத்தி வந்திருக்கின்றன ரல்லரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/64&oldid=1592032" இலிருந்து மீள்விக்கப்பட்டது