உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

10. சுந்தரர்தம் காதலன்பின் வாழ்க்கை

னிக், காதலன்பிற் சிறந்த இன்பவாழ்க்கை இடைநின்ற சுற்றத்தாரின் முயற்சியாற் சிதைவுபட்டுக் காரைக் காலம்மையார்க்கு இனிது வாயாது போனமை போலவே, சுந்தரமூர்த்தி நாயனார்க்குங் காதல் மனைவாழ்க்கை நன்கு வாயாது போயிருக்கும்; ஆனால், எல்லாம் பல்ல இறைவன் அவர்பால் மிக்க இரக்கம்பூண்டு அவர்க்கு அங்ஙனம் நேர வொட்டாமல் தடைசெய்தருளினன். பாருங்கள்! சுந்தர மூர்த்தி களின் சுற்றத்தாரும், அவர்தம் பேரழகு அருந்தமிழ்ப் புலமை சிவநேயம் முதலியவைகளை ஆழ்ந்தாய்ந்து பார்த்து, அவர்தம் தெய்வ மாட்சிக்கு ஒத்த ஒரு மணமகளைத் தெரிந் தெடுத்தவரல்லர்; தமது சைவ அந்நதணமரபில் தாம்வேண்டிய ஒருபெண்ணைத் தெரிந்து கொண்டு அவர்க்கு அவளை மணம்பொருத்தத் துவங்கினர். அது கண்ட பேரருட் கடலான சிவபிரான் ஓர் அந்தண முதியோனாய் வந்து, அச்சுற்றத்தார் கூட்டிய மணம் நடைபெறாவாறு தடைசெய்து, அவரைத் திருவெண்ணெய் நல்லூர்க்கு ஈர்த்துப் போய் ஆட்கொண் டருளினர். அதன்பிற் சுந்தர மூர்த்திகள் இறைவன்பால் அன்பு மீதூரப்பெற்றுப், பல திருக்கோயில்களை வணங்கிக்கொண்டு, திருவாரூர்க்கு வந்த காலையிற் சிவபிரான் திருக்கோயிலில் ஆடல் பாடல்களாகிய திருத்தொண்டு செய்து கொண்டிருந்த இளநறுங் கன்னித் தெய்வ நங்கையாரான பரவைநாச்சியாரைக் கண்டு உள்ளமும் உயிரும் உருகி யொருங்கே அவர்பாற் பதியப் பெற்றாராய்க் கழிபெருங் காதலன்பு கொண்டு,

“கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/70&oldid=1592062" இலிருந்து மீள்விக்கப்பட்டது