உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

39

பலரும் இசைதல் போல் ஒரு பெண் மகன் ஆண்மக்கள் பலரை மணக்க எரும் இசைவதில்லாமையானும், சுந்தரமூர்த்திகள் இருவரைக் காதலித்தல் ஆண்பா லியற்கைக்கு ஒத்ததேயாம் ஆகலானும் என்பது.

மேலுஞ், சுந்தர மூர்த்திகளின் தெய்வத் தன்மைக்கு ஒத்த பண்பாலார் இருவர் இருப்ப, அப்பெண்பாலார் இருவரின் தெய்வக் காதற்றன்மைக்கு ஒத்த ஆண்பாலார் இருவர் இலராய்ச் சுந்தரமூர்த்திகள் ஒருவரே உளராயின், அவர் காதலாலும் அருளாலும உந்தப்பட்டு ருவரை மணத்தல் வழக்கேயாம். இதுபோன்ற அரிய காதல் நிகழ்ச்சியினை நக்கீரர் மாணிக்கவாசகர் முதலான தொல்லாசிரியரும் உடன்பட்டுத் தழுவுதல் நினைவிற் பதிக்கப்பாற்று. இவ்வாறு இருவருயிரும் ருகி ஒன்றுபட்டு நிற்கும் பேரின் நிலையோ டொப்பதாகலின், அன்புருவாம் றைவனும் அவர்தம் பெருங்கிழமைக்கு ஒத்து உதவியாய் தனாலன்றோ சுந்தரமூர்த்திகள்,

“பன்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்”

என்றருளிச் செய்வாராயினர்.

தய்வக் காதற் நின்றருளினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/72&oldid=1592071" இலிருந்து மீள்விக்கப்பட்டது