உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

11. சாதிவேற்றுமை அன்புக்கு மாறு

காதலன்பு நிகழுங் காலத்து அது நிகழப் பெறுவார் இருவர் சாதி குல வேற்றுமை சிறிதும் பாராது அவ்வன்பின் வழியராய்ச் சென்று ஒருங்கு சேர்வரென்பதும், சாதி குல வேறுபாடுகளையே பார்த்துக் கொண்டு இறுமாந்திருக்கும் பொதுமக்கள் தூய காதலன்பு நிகழப் பெறுதற்குத் தக்காரைக் கண்டுகொள்ள மாட்டுவாரல்ல ரென்பதும், அருளிரக்கம் வாய்ந்த இறைவனே ஒரோவொருகாற் காதலன்புடையாரை ஒன்றுசேர்த்தற்பொருட்டுப் பொதுமக்கள் ஆக்குஞ் சாதி வேற்றுமைக் கட்டுப்பாடுகளை முற்றச் சிதைப்பனென்பதும், சுந்தரமூர்த்திகள் என்னுஞ் சைவ அந்தணர் பெருமான் உருத்திகணிகையர் குலத்திற் பிறந்த பரவை நாச்சியாரையும் வேளாளர் குலத்திற் பிறந்த சங்கிலி நாச்சியாரையுந் தமது காதல் சென்ற வழியே மணந்து கொண்டமையானும், அதற்குமுன் அவர்தஞ் சுற்றத்தார் அவரது தெய்வமாட்சி அறியாதே அவரியல்புக்குத் தகாத ஒருத்தியைத் தமது மரபினின்றும் எடுத்து மணம் பொருத்தப் புக்காலையில் அதனை இறைவனே நேர் நின்று தடைசெய்து, பின்னர் அவரியல்புக்கு முழுதுமொத்த பரவை சங்கிலியாரை மணம் பொருந்தினமையானுந் தெளியப்படுகின்றன வல்லவோ? காதலன்பு கொள்ளத்தக்கார் இருவரைப் பொதுமக்கள் அறிய மாட்டமையும், இறைவனே அவரை யறிந்து ஒன்று சேர்த்தலும் மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த,

L

L

“சொற்பால் அமிழ்திவள் யான் சுவை யென்னத் துணிந்திங்ஙனே நற்பால் நினைத்தெய்வந் தந்தின்று நான்இவ ளாம்பகுதிப் பொற்புஆ ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பிற் கற்பா வியவரை வாய்க்கடிதோட்ட களவகத்தே”

என்னும் அருமைத் திருக்கோவையார் செய்யுளானும் இனிது

புலனாகின்றன வல்லவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/73&oldid=1592076" இலிருந்து மீள்விக்கப்பட்டது