உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

பண்

41

ஆகவே, சைவசமயத்திற் பிறந்த ஒவ்வொருவருந், தம் சமயாசிரிய ராகிய சுந்தரமூர்த்தி நாயனார் நிலைநிறுத்திக் காட்டிய காதலின்ப வாழ்க்கை உலகில் நின்று நிலவுமாறு தம் ஆண் மக்களை அத்தகைய உண்மையன்பின் மனைவாழ்க்கையில் அமரச்செய்து, நமது பழந்தமிழ்க் கொள்கையாகிய சைவ சமய நலத்தினை எங்கும் பரப்பி, நம் மக்களைப் பழிபாவங்களுக்கு ஆளாக்காது இளமை தொட்டே அவர்களது உள்ளம் உண்மையன்பில் ஊறி ஒளிரும் வண்ணஞ் செய்தல் மிகவும் இன்றியமையாததாகும்.

இனிப், பழந்தமிழ்க் கோட்பாடாகிய சைவசமய உண்மை இவ்வாறிருப்பவும், இதனை அறியமாட்டாராய், ஆரியக் ருக்கள்மார் தமது நலத்தின் பொருட்டுப் புனைந்து கட்டிகொண் கொண்ட சாதி வேற்றுமையினைக் குருட்டுப் பிடியாய்ப் பிடித்து, அவ்வவருந் தத்தம் சாதிவரம்பு கடவாது தத்தம் இனத்திலேயே உண்ணல் கலத்தல்களைச் செய்தல் வேண்டுமென்றும், அப்பரும் அப்பூதிகளும் சாதிவேற்றுமை பாராது ஒருங்கிருந்து அளவளாவி உணவு கொண்டதும், சுந்தரமூர்த்திகளும் அங்ஙனமே சாதிவேற்றுமை பாராது காதலன்பின் வழிச்சென்று பரவை சங்கிலியார மணந்து கொண்டதும் அப்பெரியார்க்கு ஒக்கும். மற்று, அவர்போல் உயர்ந்த பேரன்பு நிலையினின்று அன்பில்லா இழிந்த நிலக்கண் நிற்கும் நம்மனோர் சாதிகுல வேற்றுமை கடந்து அவ்வாறு உண்ணல் கலத்தல்களைச் செய்தலாகாதென்றுந் தம்மைக் கொழுத்த சைவரெனக் கூறிப் பெருமை பாராட்டிக் கொள்வார் சிலர் கூறுகின்றனர்.இவர்தங் கூற்று நம்மனோரை முன்னேற்றம் அடைய வெட்டாது பழிபாவங்கட் படுக்குந் தீமையுடைத் தாதலையும், பண்டை நல்லாசிரியர் கொள்கைகளெல்லாஞ் சாதிவரம்பைப் சிதைத்தொழிக்கும் பெற்றிய வாதலையுஞ் சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் எமது நூலில் விரித்துக் காட்டி யிருக்கின்றேம். இங்கேயும் இவர் கூற்றுப் பிழை பாடாதலைச் சிறிது காட்டுகின்றேம். உயர்ந்தோராகிய நம் ஆசிரியர் காட்டிய ஓர் ஒழுக்கம் சிறந்த தொன்றாயின், அது பிழைபாடிலதாயின் அவர்வழி நிற்கும் நாம் அவர் காட்டிய அம்முறையே ஒழுகக் கடமைப்பட்டிருக்கின்றோம்; அவ்வாறன்றி அவர்காட்டிய அவ்வொழுக்கஞ் சிறந்த தல்லாதாய்ப் பிழைபடுவ தொன்றாயின் நாம் அதனைப் பின்பற்றி நடத்தல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/74&oldid=1592082" இலிருந்து மீள்விக்கப்பட்டது