உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

நடை

.

மறைமலையம் - 30 -30

ஆகவே, அன்பு ஒன்றனையே உயிராகக் கொண்டே பெறும் அறத்தை எடுத்து வற்புறுத்தும் நம் தெய்வ ஆசிரியர், தமது விழுமிய கோட்பாட்டிற்கு மாறுபாடின்றி அவ்வறத்தை ஒன்றாகவே கூறினாரல்லது அதனை ‘இல்லறம்', துறவறம்' என இரண்டாகப் பகுத்துத், தாம் இயற்றி யருளிய தொல்காப்பியத் தெய்வ முழுமுதல் நூலின் கண் யாண்டும் ஓதிற்றிலர். இம்மை யின்பம் விழைந்து தாம் காதலன்பு பாராட்டிய மனைவி மக்களோ விழைந்து தாம் காதலன்பு பாராட்டிய மனைவி மக்களோ டொருங்கிருந்து நடாத்திய அன்பு வாழ்க்கையும், மறுமையின்பம் விழைந்து மனைவிமக்கள் தமக்குத் தொண்டு செய்ய இம்மைமுயற்சியை விட்டு இறைவன் றிருவருளிற்றமது உணர்வினைத் தோய்வித்திருக்குந் தவ வாழ்க்கையும் ஓர் அறத்தினுள்ளேளே அமைந்த இருவகை நிலைகளாகுமல்லாமல், அவ்விரண்டும் ஒன்றோடொன்று மாறுபட்டனவாகா என்பதே நம் முதலாசிரியர் தொல்காப்பிய னார்க்குக் கருத்தாதல்,

“காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

என்று அவர் அருளிச் செய்த கற்பியற் சூத்திரத்தால் தெற்றென விளங்காநிற்கும். இதன் பொருள் என்னையோவென்றாற், காதலன்பால் துய்த்த காமவின்பம் நிறைந்து கடைக்கொண்ட வாழ்நாள் எல்லையின் நடுக்காலத்தே தமக்குக் காவலாய் அமைந்த தம் புதல்வரொடு கூடியிருந்துந், தாம் அதுகாறுஞ் செய்து போந்த அறத்தை இனித் தாம் செய்யலாகாமையின் தமக்காக அவற்றத்தைச் செய்யுஞ் சுற்றத்தாருடன் அமர்ந்துங், குடும்பத் தலைமகனுந் தலைமகளுஞ் சிறந்ததாகிய தவத்தில் தமதுணர்வினைப் பயிலச்செய்தல் தாம் அதுகாறுஞ் செய்து போந்த காதல் மனைவாழ்க்கையின் பயனாகும்' என்பதே அதுவாம்.

எனவே, காதலன்பிற் சிறந்த கணவனும் மனைவியும் ருவரையொருவர் பிரியாதிருந்ததே தவஞ் செயற்பால ரென்பதூஉம் அப்போது அவர்தம் புதல்வராயினார் அவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/93&oldid=1592177" இலிருந்து மீள்விக்கப்பட்டது