உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

17. அறம் ஒன்றே

66

இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் மூன்றாவதாக நிறுத்திய “அறம்” என்னும் முடிந்த பொருளைப் பற்றி ஆராய்ந்து அவ்வளவில் வ்விரிவுரையை முடிப்பாம். இன்பமும் பொருளும் அன்பினையே முதலும் ஈறுமாய்க் காண்டு தேடப்படுதலும் நுகரப்படுதலும் பயன்படுதலும் வேண்டுமென ஆசிரியர் வற்புறுத்தினாற் போலவே, அறமும் அன்பினையே முதலும் ஈறுமாய்க்கொண்டு ஈட்டப்படுதலும் நுகரப்படுதலுஞ் செயப்படுதலும் வேண்டுமென அவர் வலியுறுத்துகின்றமை மேலெடுத்துக் காட்டிய இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு, அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்பதனால் நன்கு விளங்காநிற்கும். எனவே, உண்மை யன்பு இன்றி, வெறும் பட்டப்பெயரை நச்சியும் உலகத்தார் தம்மை மீக்கூறுதலை விழைந்தும் ஆற்றும் அறம் நன்மை பயவாமை அறியப்படும். இவர் அறஞ்செய்வதிற் சிறந்தாரென்று அரசினருங் குடிமக்களும் புகழ்ந்து பேசுதலையே நோக்கிநிற்பர், தாம் குறித்த அறத்தைத் தமது கைப்பொருளாலன்றிப் பிறரது பொருளாற் செய்தற்கும் பின்வாங்கார். 'இவ்வேழைமக்களின் பொருளை அவர் கண்ணீர் சிந்தப் பிடுங்கிப், பிறர்மெச்ச அறஞ் செய்தலால் யாதுபயன்?’ என்று அவர் உணரமாட்டாராதலால், அன்பின்றிச் செய்வாரது அறங் “கடைத் தேங்காயைத் திருடி வழிப்பிள்ளையார்க்கு உடைப்பதனையே" ஒப்பதாய் முடியும். மற்று எல்லா உயிர்களிடத்தும், எல்லா மக்களிடத்தும் நெகிழ்ந்த அன்புடையவர்களோ எவ்வுயிர்க்கும் எவர்க்குந் தீங்குநேராத முறையிற் பெயர் புகழ்களை வேண்டாது அறஞ்செய்வராகலின், அவர் செய்யும் அறமே தமக்கும் பிறர்க்கும் உண்மையிற் பயன்படுவதுடைத்தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/92&oldid=1592172" இலிருந்து மீள்விக்கப்பட்டது