உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் - 30 -

என்ற பட்டினத்தடிகள் பொன்பொழிகள் உண்மை நாடோறும் நம் கண்ணெதிரே நிகழ்ந்து வருகையிற், கல்வி கற்றவர் நிலையில்லாத பொருளின் பொருட்டே அதனைப் பயன் படுத்தலுஞ், செல்வமுடையவர் மேலுஞ் செல்வம் பெறுதலையே கருதிப் பிறர்பொருளைப் பலவழியாற் கவர்தலும் எவ்வளவு கொடுமை! எவ்வளவு பேதைமை! ஒருவன் உலகமெல்லாம் பெற்றாலுந் தன் உயிரை இழந்து

66

L

விடுவனாயின் யாது பயன் என்ற ஏசுமுனிவருரையின்

உண்மையை நினைந்து பார்மின்கள்! இப்பிறவியிற் கற்றதும் பொருள் ஈட்டியதும் போலவே ஒவ்வொரு பிறவியிலுஞ் சென்று கற்றலும் பொருள் ஈட்டலுஞ் செய்யவேண்டியரான மக்கள் அவ்விரண்டையும் அடுத்தடுத்துச் சய்தவில் அலுப்புறல் வேண்டாமோ! அவ்விருவகைப் பொருளாலும் அன்பையும் அறிவையும் வளர்த்துப் பிறவியைத் தூய்மை செய்து இறைவனது திருவடிப் பேரின்பத்தைப் பெறாமல் இப் பிறவிவட்டத்தில் ஓயாது கிடந்து சுழலுதாலாற் பயனென்ன! ஆகவே, கல்விகற்றலும் அதனைக் கற்பித்தலும் அதனைப் பயன்படுத்தலும் அன்பு அறிவுகளை வளர்த்தற்குக் கருவியாக முதலிற் பயன்படுத்தி, அதன்பின் தமது வாழ்க்கையின் நலத்திற்குப் பொருள் தேடுதலில் அதனைப் பயன்படுத்துவதே அறிவுடைமையா மென்பதூஉம், அங்ஙனமே செல்வத்தைத் தேடுதலும் அதனைத் தேடுவித்தலும் அதனைப் பயன் படுத்தலுமாகிய முயற்சிகளெல்லாங் கல்வியையுங் கற்றார் தொகையையும் பெருக்கி அன்பினை எங்கும் பரவச் செய்தற்கு முதலிற் பயன்படுத்தி, அதன்பின் தமது வாழ்க்கை நலத்திற்குப் பயன்படுத்துவதே அன்புடைமையா மென்பதூஉம் நம் பழந்தமிழ்ச் சைவக் கோட்பாடாதல் பெறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/91&oldid=1592167" இலிருந்து மீள்விக்கப்பட்டது