உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

57

ஆசிரியர் தொல்காப்பியனாரும் அவர்வழி வந்த திருவள்ளுவர் முதலிய சான்றோருமோ, அன்பு வளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்குமே கல்விகற்றல் வேண்டுமென மொழியாநின்றார். நம் ஆசிரியர் அறிவுரையைத் தழுவாத நம்மக்களோ பொருளீட்டுதல் ஒன்றன் பொருட்டாகவே கல்வி கற்றலும் அதனைப் பயன்படுத்தலுஞ் செய்துவருதலால் விளையுந் தீமைகள் அளவில்லாதனவாய்ப் பெருகுகின்றன! பொருட்பேறு ஒன்றையே கருதுவோர் பிறர் நலங் கருதுவரோ! தம்மினும் ஏழைகளாய் இருப்பவர் பொருள்களையும் கவர்ந்து கொள்ள வன்றோ சூழ்ச்சி செய்கின்றனர்! இரவில் திருடுந் திருடர்க்கும், வழிமறித்துக் கொள்ளையடிக்கும் வழிப்பறிகாரர்க்குங், கல்வியை உதவியாய்கொண்டு உயர்நிலைகளாகிய மாறுகோலம் பூண்டு கைக்கூலி வாங்கும் பகற்கொள்ளைக்காரர்க்கும் வேறு பாடுண்டோ சொன்மின்கள்! இங்ஙனமே செல்வப் பொருளைக் கொண்டு மேலும் மேலுஞ் செல்வத்தைத் திரட்டிச் சேர்ப்பவர்கள் எத்தனையோ ஏழைக்குடும்பங்களைப் பாழாக்கிச் செல்வர்களாகின்றார்கள்! ஆங்கிலம் வடமொழி எவ்வளவு கற்றாலும் என்ன

முதலானவைகளை

பயன்!

அன்புக்கும் அறிவுக்கும் பயன்படுத்தற்பாலவான கல்வியையுஞ் செல்வத்தையும் மேலுந் திரண்ட செல்வத்தை மேன்மேற் பெருக்குதற்குப் பயன்படுத்தலால் எத்தனை கொலைகள்! எத்தனை அழிவழக்குகள்! எத்தனை புனை சுருட்டுகள்! எத்தனை கொடும் பொய்கள்! நாடோறும் நாழிகைதோறும் அடுத்தடுத்து நிகழாநிற்கின்றன! இவ்வளவு தீங்குகுள் செய்து ஈ ஈட்டிய பொருளை ஈட்டியவனாவது நிலையாக இருந்து நுகர்கின்றனனா? அதுவும் இல்லையே! பருநோய் கொண்டு நீள வருந்தியோ, நுண்ணோய் கொண்டு சடுதியிற் செத்தோ, தாய் அலறத், தந்தை யலற, மனைவி யலற மக்கள் அலற எங்கோ மாயமாய் மறைந்துபோய் விடுகின்றனனே! அவன் அவ்வளவு பிறரைத் துன்புறுத்தித் தொகுத்த பொருளில் எள்ளளவாவது கூடச்சென்றதா? இல்லையோ!

66

ஓர்

அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு கைத்தலை மேல்வைத் தழுமைந்தருஞ் சுடுகாடுமட்டேபற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/90&oldid=1592163" இலிருந்து மீள்விக்கப்பட்டது