உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

16. செல்வத்தின் பயன்

னி, நம் தெய்வ ஆசிரியர் தொல்காப்பியனார் பொருளைக் கல்விப்பொருள் செல்வப்பொருளென இரண்டாகப் பகுத்து, என்றும் அழியாததாய் மக்களுயிரின் அறிவை விளக்கி அவ்வுயிரைப் பிறவிகடோறுந் தொடர்ந்து செல்லும் விழுப்பம் உடைமைபற்றிக் கல்வியை முதல் நிலைக்கண் வைத்துங் கல்விபோல் அழியாச் சிறப்புடைய தன்றாயினும் அக்கல்வியைப் பயன்படுத்தற்கும் உலகியல் ஒழுக்கம் நடைபெறுவித்தற்கும் இன்றியமையாததாதல் பற்றிச் சல்வத்தை அதன் பின்நிலைக்கண் வைத்தும் அவ்விரண்டும் அன்பினால் உந்தப்பட்டு மேலு மேலும் அவ் அன்பினை வளர்த்துப் பரவச் செய்தற்கே கருவியாதல் வேண்டுமென ன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு, அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்னுஞ் சூத்திரத்தில் ஆணை தந்திருக்கின்றார். ஆகவே, கல்வியானது அறிவை விளங்குங் கருவியாதலோடு எல்லா உயிர்களினகத்துந் தொகுத்து வைக்கப்பட்டிருக்கும் அன்பு என்னுந் தேனைப் புறத்தே ஒழுகச்செய்து, உலகத்தை அத் தேன்பெருக்கிற் படிவித்து இன்புறச்செய்தல் வேண்டும் என்னுஞ், செல்வமானது அக்கல்விக்குத் துணையாய் அதனையும் அன்பையும் வளரச் செய்தற்குக் கருவியாதல் வேண்டு மென்றும் நாம் தெளியப் பெறுகின்றனம்; அன்பர்களே!

66

""

ஆனால், இஞ்ஞான்றுள்ள மக்களிற் கல்வி கற்பாருஞ் செல்வந் தொகுப்பாருங் கல்வி கற்பது அறிவினை விளக்கி அன்பினை வளர்த்தற்பொருட்டேயாமென்றுஞ், செல்வம் தொகுப்பது தமக்குமட்டுமேயன்றிக் கல்விக்குங்கற்றார்க்கும் வறியார்க்கும் அறத்திற்கும் பயன்படுத்தற்பொருட்டேயாம் மென்றும் உணர்கின்றா ரில்லை; கல்வி கற்பது பெரும் பொருள் தொகுப்பதற்கே என்று பிழையாக நினைக்கின்றார்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/89&oldid=1592157" இலிருந்து மீள்விக்கப்பட்டது