உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

55

பயிலுதலும் ஆகாதென அவரைத் துரத்தியும் அவ்வேழை மக்கட்குப் பெருங் கொடுமை செய்துவரல் தெய்வத்திற்கு அடுக்குமா? “ஏழை யழுத கண்ணீர் கூரியவாள் ஒக்கும்’” என்னும் பழமொழிப்படி, நம் ஏழைமக்கள் படுந் துயரமானது, அத்துயத்திற்கு ஏதுவாய் நிற்குஞ் சல்வர்களையுங்

குருமார்களையுஞ் சுவடறத் தேய்த்து மாய்க்குங் காலம் றைவனது சினத்தால் விரைந்து அணுகுகின்றதென்று ஓர்மின்கள்! ஓர்ந்து, எல்லா மக்களுக்குங் கல்விப் பயிற்சி இன்றியமையாத தெனவும், அக் கல்வியாகிய விளக்கைக் காண்டு எல்லாம்வல்ல சிவபிரான்றன் பேரின்ப வெள்ளத்தைத் தெரிந்து சென்று அவ்வின்பத்தை நுகர வம்மின்களெனவும் நம் சைவசமய ஆசிரியர்கள் இடைவிடாது அறிவுறுத்தி வந்த அருட்பான்மையினைக் கடைப்பிடியாக எடுத்துக்காட்டி மக்களெல்லாரையும் அழைத்த,

66

'காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா

காரசிவ

போகம் எனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய்

ஏக உருவாய்க் கிடக்குதையோ இன்புற் றிடநாம் இனியெடுத்த

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாருஞ்

செகத்தீரே”

என்னுந் தாயுமான அடிகளின் பழந் தமிழ்ச் சைவக் கோட்பாட்டைக் கடைப்பிடித்து உண்மைச் சைவராகிய நாம் நம்மவரெல்லார்க்கும் நம் அருந்தமிழ்க் தெய்வக் கல்வியைப் புகட்ட முன் நிற்போமாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/88&oldid=1592152" இலிருந்து மீள்விக்கப்பட்டது