உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறைமலையம் - 30

இன்றியமையாததான தமிழ்மொழிப் பயிற்சிக்குச் சலவிடாமற் பிறமொழிப் பயிற்சிக்குச் செலவிடுதல் ஐயகோ! காடிது! கொடிது! நம் தமிழ் நாட்டு மக்களின் பேருழைப்பினைக் கண்டு பெரும் பொருள் தொகுத்து வைத்திருக்குஞ் செல்வர்கள், அம்மக்களின் உதவிக்குக் கைமாறாகவாவது அவர்க்குரிய தமிழ்மொழிப் பயிற்சியினைப் பெருகச் செய்ய வேண்டியவர்களா யிருக்க, அரசினராற் றாம் பெறும் வரிசைகள் குறித்து அவர்கள் அதனை அயல் மொழிப் பயிற்சிக்குச் செலவழித்தல் நன்றி மறந்த குற்றமாமன்றோ? அயல்மொழிப் பயிற்சியினை எவ்வளவுதான் இங்கே பரவ வைத்தாலும், அதன் உதவி கொண்டு நந் தமிழ்மக்களைச் சிறிதும் முன்னேற்றல் இயலாது. நம் தமிழ்மக்களைச் சிறிதும் முன்னேற்றுதல் அவர் தந் தாய்மொழியாகிய தமிழ் ஒன்றினாலேதான் கைகூடும் என்பதை நந் தமிழ்நாட்டுச் செல்வர்கள் கருத்திற் பதிக்கக் கடவராக!

மேலும், நந் தமிழ்நாட்டுக்கு ஆறாயிர நாழிகை வழி விலகிக்கிடக்கும் மேல்நாட்டிலுள்ள கிறித்தவக் குருமார்கள் இந்நாட்டுக்கு வந்து, நூறாயிரக் கணக்காகத் தம் நாட்டு மக்கள் தந்த பொருளைச் செலவிட்டு, இங்குள்ள நாடுநகரங்களிலுஞ் சேரிகளிலும் பல்லாயிரக்கணக்கான கல்விச் சாலைகள் திறப்பித்தும் மாதாகோவில்கள் கட்டுவித்தும் இந்நாட்டவர் எல்லார்க்கும் ஏதொரு வேற்றுமையும் இன்றிக் கல்வி கற்பித்துங் கடவுள் உணர்ச்சி யுண்டாக்கியும் பேருதவி புரிந்துவராநிற்க, நம் நாட்டு ஏழை மக்கள் ஒரு நாளுக்கு ஒருவேளை நல்லுணவு மின்றிப் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து நெற்றித் தண்ணீர் நிலத்தில்விழப் பாடுபட்டுத்தேடிக் கொடுக்கும் பெரும் பொருளைப் பேழை பேழையாய் வைத்திருக்குஞ் செல்வர்கள் தமது பெருமைக்கும் தமது நலத்திற்கும் தம் மனைவி மக்களின் ஆடை அணிகலங்கட்கும் தம் வேடிக்கை விளையாட்டு கட்குமாகத் தமது பெரும்பொருளைச் செலவு செய்துகொண்டு தமக்கு அப்பொருளைச் சேர்த்துக் கொடுக்கும் ஏழைகளிற் பெரும் பாலாரைத் தீண்டாதவரென ஒதுக்கி வைத்தும், அவர்க்கு நல்லுணவும் நல்வெள்ளாடையுங் கூடக் கொடாதும், அவர் வணங்குதற்குத் தம் கோயில்களில் உள் வருதல்கூடத் தகாதென விலக்கியும், அவர் தம் மக்களோடு ஒப்ப இருந்து கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/87&oldid=1592147" இலிருந்து மீள்விக்கப்பட்டது