உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

15. இஞ்ஞான்றைத் தமிழ் நிலை

மற்று, இக்காலத் துள்ளவர்களோ அழிவில் பெருஞ் செல்வமாகிய தமிழ்க் கல்வியைப் பாராட்டாதும், தமிழ் கற்றவர்களைப் பாதுகாவாதும், தமது செல்வத்தையே தெய்வமாகக் கருதி அதனை மேன்மேற் பெருக்குதற்கும். தம்முடம்போடு அழிந்து மாய்வனவாகிய அரசியல் நிலைகளும் போலிப் பட்டங்களும் அடைதற்கும், தமது நினைவை அல்லும் பகலும் ஈடுபடுத்தி அதன்கண் மட்டுமே முயற்சி யுடையராய் முனைந்து நிற்கின்றனர்! இதனால் தமிழ்க் கல்வி வளஞ்சுருங்கி வருவதோடு, தமிழ் கற்ற அறிஞர்களுந் தமது வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்வருவாய் இன்றி மிடிப்பட்டுத் துன்புறுகின்றனர்! நம் தமிழ் நாட்டவர்கள் தமது தாய் மொழியை நிரம்பக் கற்றுத் தேர்ச்சி பெறுதற்கு இடனின்றித் தத்தளிக்கையில், நம் செல்வர்கள் அயல்நாட்டு மொழியாகிய ஆங்கிலத்தின் பயிற்சி மிகுதற்கும், ஆங்கிலக் கல்விச்சாலைகள், வடமொழிக் கல்லூரிகள், இந்தி மொழிக் கல்லூரிகள் நாட்டுதற்கும் பொருள் உதவி செய்கின்றனர். “தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை வாங்கத், தம்பி கும்பகோணத்திற் கோதானஞ் செய்கின்றான்” என்னும் பழமொழியோ டொப்ப, நம் தாய் மொழிப் பயிற்சி சிறிதுஞ் செவ்வனே நடைபெறா இந்நாளில், அரசினர் உதவியால் ஆங்கிலமொழிப் பயிற்சி எங்கும் பரவிக்கிடக்கும் இந்நாளில், இறந்துபட்ட வடமொழி யினையும் வடநாட்டவர் வழங்கும் இந்தி மொழியினையும் பயில்கவென்று கூக்குரலிடுவார் தொகை பெருகும் இந்நாளில் வங்காளம் தெலுங்கு மலையாளம் முதலான மொழிகட்கு உரியோர் புகழத்தக்க முறையில் தத்தம் மொழிப்பயிற்சியினைப் பெருகச்செய்தற் பொருட்டு அவ்வம்மொழிகளிற் பல்கலைக் கழகங்கள் திறப்பித்துவரும் இந்நாளில், நம் தமிழ்நாட்டுத் செல்வர்கமட்டும் நம் தமிழ்நாட்டவர் முன்னேற்றத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/86&oldid=1592142" இலிருந்து மீள்விக்கப்பட்டது