உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மறைமலையம் 30 -

ழலுந் துறவுநிலை நல்லதோ! தான் தேடிய பொருள்கொண்டு தன்புதல்வரும் பெருக்கிய செல்வத்தால் ஊணும் உடையும் பிறநலங்களும் பெற்றுத் தானுந் தன் மனைவியுந் துன்பின்றி நோற்குந் தவநிலை நல்லதோ! நீண்ட நாள் தன்னோடு அன்பினால் உயிர்வாழ்ந்தார் தன்னைப் பிரிந்தமையால் தனித்துயர் உழக்கத் தான் மட்டும் மறுமை யின்பம் நாடிப் ம புகுவதாகிய துறவு நிலை நல்லதோ! அன்றித் தன்னொடு நீள அன்புற்று உயிர்வாழ்ந்தார் தாமுந் தன்னைப் போலவே திருவருளின்பத்தை நாடித் தன்னோடுடனிருந்து நோற்பதாகிய தவநிலை நல்லதோ! என்று பகுத்து நடுநின்று ஆராய்வார்க்கு, வடவர் மேற்கொண்ட துறவு வாழ்க்கையினுந் தமிழர் மேற்கொண்ட தவவாழ்க்கையே பலவாற்றானுஞ் சிறந்த தென்பது இனிது புலனாம்.

மேலும், மனைவிமக்களையெல்லாம் அன்பின்றிப் பிரிந்து தவமுயற்சியில் நிற்பதாகிய துறவுநிலை, காண்பவர்க்கு வருட்சியினை விளைவிப்பதன்றி, அந்நிலையில் நிற்பார்க்குக் சிறிதும் நலந்தருவதன்று. ஏனென்றால், ஊனாற் சமைந்த இவ்வுடம்பு உள்ளவரையில், அதற்கு உணவு இடுதல் வேண்டும்; ணவினால் உடம்பு தன்னிலையில் நிற்கும் வரையில் ஆண்டில் முதிர்ந்தார்க்கும் புணர்ச்சிவேட்கை யுண்டாதலை யாண்டுங் காண்கின்றேம். பலவாற்றாற் பட்டினி கிடந்து உடம்பை வாட்டிய குசேலமுனிவருந் தம்மனையாளைக்கூடி இருபத்தேழு பிள்ளைகளைப் பெற்றனரென்றால், உலக வாழ்க்கையைத் துவரத்துறந்து பெருந்தவத்தில் வைகிய விசுவாமித்திர முனிவரும் மேனகை என்னும் அரம்பை மாதைப் பன்னிரண்டு ஆண்டுகள் கூடிக்கிடந்து சகுந்தலையைப் பெற்றனரென்றால், அவர்போல் அத்தனைக் கடுந்துறவில் நிற்கமாட்டாத எளிய மக்கள், மனைவி மக்களை முற்றத்துறந்து முழுத்தவ வாழ்க்கையில் இழுக்கின்றி நிற்கமாட்டுவரோ சொல்லுங்கள்! முழுத்துறவினை வலியுறுத்திவந்த கெளதம சாக்கியர் காலத்திலேயே அவரால் துறவு புகுந்த பிட்சுக்களும் பிட்சுணிகளுந் தத்தம் நிலை குலைந்து காம இன்பத்திற் கிடந்துழன்றன ரெனவும், உரோமாபுரியில் அங்ஙனமே துறவுநிலையிலிருந்த கத்தோலிக் கிறித்துவக் குருமார்களுங் கன்னிகளுந் தம் நிலைவழுவி ஒழுகினரெனவும் பண்டை நிகழ்ச்சிகளை நூல்களின் வாயிலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/95&oldid=1592188" இலிருந்து மீள்விக்கப்பட்டது