உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

63

நன்கறிவதோடு, இஞ்ஞான்றுள்ள துறவு மடங்கள் பெரும்பாலானவற்றிலும் அத்தகைய சீர்கேடான நிகழ்ச்சிகள் தொடர்பாக நடைபெற்று வருதலையும் உணர்ந்து வருகின்றனம் அல்லமோ? இத்தனைச் சீர்கேடும், இழுக்கிய நடையும் எதனால் வந்தன? உலக இயற்கையும் மக்களியற்கையும் இவற்றை வகுத்த இறைவன் திருவுளக் குறிப்பும் நன்குணர்ந்த நம் பேராசிரியராகிய தொல்காப்பியார் அறிவுறுத்திய தவநிலையினைத் தழுவாமல், உலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் இவற்றைத் தோற்றுவித்த ஆ ண்டவன் திருவருட் குறிப்புக்கும் மாறானதொரு துறவு நிலையைப் பௌத்த சமண மதங்கள் கூறியபடி நம்மனோர் தழுவிய நடக்கப் புகுந்தமையாலன்றோ? மனைவாழ்க்கையில் இருந்தக்கால் தாம்

செய்து போந்த முப்பத்திரண்டு

அறங்களையும் தம் உரிமைச் சுற்றத்தார் செய்து போதருமாறு ஒழுங்குசெய்து வைத்துத், தம்புதல்வர் தமக்கு வேண்டியவைகளைச் செய்துவர, உலகநன்மையையுந் தமது நன்மையையும் நாடி இறைவனை உளங்குழைந்துருகி வழுத்துவ தாகிய தவநிலையைக் கணவனும் மனைவியும் ஒருங்கிருந்து செயற்பாலரென நம் பேராசியர் தொல்காப்பியனார் உரைத்த படி நம்மனோர் செய்துவந்தனராயின் மேற்சொன்ன தீமைகள் வாராவன்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/96&oldid=1592193" இலிருந்து மீள்விக்கப்பட்டது