உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

18. பண்டைத் தவவாழ்க்கை

இனி, ஆசிரியர் தால்காப்பியனார் காட்டிய தவநெறியிலேயே வடநாடு தென்னாடுகளிற் பண்டைக்காலத் திருந்த முனிவர்கள் எல்லாரும் நிலைநின்றனர் என்பதற்கு, வட நாட்டு முனிவராகிய மரீசி, அத்தரி, அங்கீரசர், புலகர், கிரது, புலத்தியர், வசிட்டர் முதலியோரெல்லாந் தத்தம் மனைவி மாரோடிருந்து தவஞ் செய்தமையுந் தமிழ்நாட்டிலிருந்த

பாலைக்

களதமனார், திருவள்ளுவனார், சுந்தரர் முதலா யினரும் பெரியபுராணத்துச் சொல்லப்பட்ட சைவ நாயன்மார் பலருந் தத்தம் மனைவியரோடுமிருந்தே தவமியற்றிச் சிவபிரான் திருவடிப் பேரின்பத்தை எய்தினமையுமே சான்றாம். இது குறித்தன்றோ தெய்வத் திருவள்ளுவனாரும்,

66

“அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று”

என்னுந்

திருக்குறளால்

அறவாழ்க்கை

இல்வாழ்க்கையேயா மென்றும்,

66

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஓய்ப் பெறுவ தெவன்”

எனப்படுவது

என்னுந் திருக்குறளால் துறவுநிலை புகுதல் பயன் இன்றா மென்றுந் தொல்லாசிரியர் வழியே கடைப்பிடித்து ஓதியதோடு, ‘துறவு’ என்பது நெஞ்சினாற்றுறத்தலே யாமெனவும் “யாம் செய்தேன்" என என இறுமாந்துரைக்கும் அகப்பற்றும், எனது பொருள்' எனச் சொல்லும் புறப்பற்றும் ஒருங்கறுதலே யாமெனவும் வற்புறுத்துவாராய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/97&oldid=1592197" இலிருந்து மீள்விக்கப்பட்டது