உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் - 31

நூறாண்டுகள் வரையில் இனி துயிர் வாழ்ந்து வந்தனர். அவர்தங் கணவருங் கவலையும், நோயுந் துன்பமும் இலராய்ச் செவ்வனே இன்பந் துய்த்து நீண்டகாலம் உயிர் வாழாநின்றனர்.

இத்தகைய வாழ்க்கையமைப்பு இற்றைக்குச் சிறிதேறக் குறைய ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னமே யிருந்து நெடுக நடைபெற்று வந்து, பிறகு சில நூற்றாண்டு களாக அருகி ரோவொரு குடும்பங்களில் மட்டும் இக்காலத்தே நடை பெறும் நிலைக்கு வந்துவிட்டது. காதலின் மணந்த முதன் மனைவிக்குப் பின், பெற்றேர்களால் வளர்த்து அமர்த்தி வைக்கப்பட்ட மனைவியர் ‘காமக் கிழத்தியர்' அல்லது 'இற்பரத்தையர்' என்னும் பெயருடை யராய்த் தலை மகனோடு ஒருங்கிருந்து வாழ்க்கை செலுத்திய வரலாறு,

66

காமக் கிழத்தி மனையோ ளென்றிவர்

ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்”

ஞ்

என்னுந் தொல்காப்பியக் கற்பியற் சூத்திரத்தால் (5) நன்கறியக் கிடக்கின்றது. தொல்காப்பியர் காலம் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டது. இன்னும் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட இறையனாரகப்பொருள் காலத்திலும் இவ்வழக்கம் நடைபெற்று வந்தமை அந்நூலுக்கு நக்கீரனார் கண்ட விழுமிய பேரு ரையின்கண் விளக்கமாக நுவலப் பட்டிருத்தலை மேலெடுத் துக் காட்டினாம். இன்னுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திலும் இவ்வழக்கம் இருந்தமை அவர் முதன் மணந்த பரவைநாச்சியார்க்குப்பின், இரண்டாம் மனைவியாராகச் சங்கிலிநாச்சியாரை மணந்தமை கொண்டு அறியப்படும். இக்காலத்திலுஞ் செல்வர்கள் பலர் மனைவியர் பலரை மணந்து வாழ்க்கை நடத்துகின்றனர். செல்வம் இல்லாத ஏழை யெளியவர்களிலும் மனைவியர் மனைவியர் பலரை L மணந்து வாழ்வாரும் பலர் உளர்.

அங்ஙனமாயிற், செல்வம் படைத்தவர்கள் மனைவியர் பலரை வைத்துத் தமது வாழ்க்கையை நன்கு நடத்துதற்கு அவர்கள்பாற் பொருள்வள மிருக்கின்றது. பொருள் இல்லாத ஏழையெளியவர்களிலுங், கணவனும் அவன்றன் மனைவியரும் பல்வகைக் கைத்தொழில்கள் செய்து பிழைப்பவர்களாய் இருத்தலால், அவர்களுள்ளும் மனைவியர் பலர் இருத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/123&oldid=1592849" இலிருந்து மீள்விக்கப்பட்டது