உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

97

அவர்கள் என் செய்வோம்! எங்களாற் சேர்க்கையின்றி இருக்க முடியவில்லையே!" என்றே விடை பகர்ந்து வந்தனர். அவர் தம் மனைவியரும் எங்கே தங் கணவர் வேறு மாதரை மருவச் சென்று விடுவரோ என்னும் அச்சத்தால் தம் உடல் நிலை அவரை மருவுதற்கேற்ற நலம் வாயாதிருக்கையிலும், வேண்டா விருப்பாய் அவரைக் கூடுதற்கு இசைந்து, தமக்குந் தங் குழந்தைகளுக்குந் தொடர்பாக நோயையுந் துன்பத்தையும் வருவித்துக் கொள்கின்றனர்.

ங்ஙனமாக இஞ்ஞான்றை மணவாழ்க்கையில் மேன் மேற் கிளைக்குந் துன்பங்கள், அஞ்ஞான்றிருந்த இளைஞர்க் கும் அவர்தங் குடும்பத்தார்க்கும் வாராமைப் பொருட்டு, அவர்தம் பெற்றோர்கள் அவர்க்குச் செய்து வைத்த இல் வாழ்க்கை ஏற்பாடுகள் சாலவும் பாராட்டற் பாலனவாய் இருக்கின்றன. அவ்வேற்பாடுகள் என்னையோ வெனிற்;

“காதற் பரத்தை எல்லார்க்கும் உரித்தே”

என்னும் இறையனாரகப்பொருட் சூத்திரத்திற்குத் தொல் லாசிரியர் நக்கீரனார் உரைத்த வுரையிலிருந்து அவற்றை ஈண்டு எடுத்துக் காட்டுதும், பண்டைக் காலத்திருந்த பெற்றோர்கள் தம் புதல்வர்கட்கு உரிமையாகத் தத்தஞ் செல்வ வளத்திற்குத் தக்கபடி பெண்கள் இருவர் மூவரை அவர்க்குக் காமக்கிழத்தி யராக வளர்த்து வைப்பர். தம் புதல்வன் தன்னாற் காதலிக்கப் பட்ட ஒரு மங்கையை மணஞ்செய்து கொண்டபின், அவன்றன் மனைவி மகப் பெற்றனளாயின், அம்மகவு நன்கு வளர்ந்து சிறுவன் சிறுமி யாகும்வரையில், அவன் தன் மனைவியை அணுகாமைப் பொருட்டு, அவனுக்கு உரிமையாகத் தாம் வளர்த்த இள மங்கையரை அவன் பெற்றோர்கள் அவனுக்கு மனைவி யராக அமைத்து வைப்பர். இவ்வாறு தனக்கு அமர்த்தி வைக்கப்பட்ட மனைவியரை ஒருவர் பின் ஒருவராய்க் கூடி அவன் வாழ்க்கை செலுத்தா நிற்பனாகலின், அவன்றன் காதன் முதன் மனையாளும் ஏனை மனைவியரும் அடுத்தடுத்து மகப்பெற்று வளர்க்குந் துன்பத்திற்கு ஆளாகாமலும், தங் கணவனைத் தொடர்பாக மருவித் தமதுடல் நலத்தையுந் தாம் பெறும் மக்களின் உடல் நலத்தையும் பழுதுபடுத்தாமலும் மனநல உடல்நலங்கள் நன்கு வாய்க்கப் பெற்றுக் கிட்டத்தட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/122&oldid=1592848" இலிருந்து மீள்விக்கப்பட்டது