உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறைமலையம் - 31

நோய்கொண்ட மகவினைப் பெற்றுவிடுமாறு செய்யுங் கணவர்களே இத்தமிழ்நாட்டில் மிகுதியாய் இருக்கின்றனர்.

1

L

மனைவி ஒரு பிள்ளை பெற்றபின் மூன்றாண்டு வரையிற் கணவன் அவளை அவளை அணுகலாகாதென்று இத் துறையில் ஆராய்ச்சிவல்ல மருத்துவ ஆசிரியர் கௌவன் என்பார் வரைந்திருக்கின்றார். எமது கருத்தோ தாம் ஈன்ற மகவு ஐந்தாண்டு வளர்ந்து பள்ளிக்கூடஞ் செல்லும் வரையில் மனைவியுங் கணவனும் மருவுதல் ஆகா தென்பதே யாம். தான் பெற்ற பிள்ளை பள்ளிக்கூடஞ் சென்றுவரத் துவங்கிய பிறகுதான் மனைவிக்குச் சிறிது ஆறுதலாய் ஓய்ந்திருக்கவும், அவளுடம்பு முழுநலம் பெற்று மீண்டுந் தன் கணவனை மருவுதற்கு ஏற்ற மனக்களிப்புக் கொள்ளவும் இடம் உண்ட கின்றது. ஆதலால், மனைவி ஒரு மகவீன்று ஐந்தாண்டுகள் சென்ற பிறகு அவளை மருவுதல்தான், அவள் கணவன் அவளுக்கும் அவள் ஈன்ற மகவுக்கும் பின்னர்ப் பிறக்கப்போகும் மகவுக்குஞ் செய்யும் பேருதவியாகும். அங்ஙனமின்றி, அவள் மகவீன்ற ஓராண்டுக்குள் அவன் அவளைக் கூடி, ஈன்ற மகவு நன்கு வளர்தற்கு முன், அவள் மற்றுமொரு மகவினை ஈனும்படி செய்து விடுவானாயின், அதனால் மனைவியின் உடல்நலம் பழுதுபட்டுப் பல நோய்களுக்கு இருப்பிடமாவது மல்லாமல், அவள் முதலில் ஈன்ற மகவும் பின்னர் அதனை யடுத்து ஈன்ற மகவுங் கூட உடல் நலங் கெட்டு, எல்லார்க்குந் துன்பந் தருவன வாய்ச் சில்லாண்டுகள் உயிரோடிருந்து, பின்னர் இறந்து போய் விடுகின்றன! இங்ஙனம் நாடோறும் நோய்த் துன்பமும் பின் அதனை யடுத்தடுத்துச் சாவும் நிகழும் ஓர் இல்லம் நிரயக் குழியாகுமே யன்றி, அஃதோர் எள்ளளவு இன்பத்திற் கேனும் வாயிலாகு மென்று கூறல் கூடுமோ? இவ்வளவு துன் பத்தையும் விளைத்துக்கொண்டு ஒருவன் வாழும் வாழ்க்கை உண்மையில் இல்லற வாழ்க்கை யென்று சொல்லப்படு தற்கும் ஏற்குமோ? அறிவுடையீர் உணர்ந்து பார்மின்கள்!

பெரும்பாலும் இத்தகைய நிரயவாழ்க்கை நடாத்தும் நம் ஆடவர் பலரைப் பார்த்து, “மகவீன்று நாற்பது நாள் கூட ஆகாத நிலையில் நீர் நும் மனைவியைக் கூடி மறுபடியும் ஓராண்டிற்குள் அவர் மற்றுமொரு மகவினை ஈனும்படி செய்வது நன்றாகுமா?” என வினவிய காலங் களிலெல்லாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/121&oldid=1592847" இலிருந்து மீள்விக்கப்பட்டது