உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

  • மறைமலையம் - 31

புதுமையாயும் பொருத்தமில்லாததாயுங் காணப்படலாம். பெண்பாலாரும் அவர் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும் அவர்தங் கணவரும் நோயுங் கவலையும் வறுமையுந் துன்பமு மின்றித் தமக்கும் பிறர்க்கும் பயன் பட்டு, நீடு வாழ்தலை விழைவார்களானாற், பழந்தமிழ்ச் சான்றோர் வகுத்த இப் பன்மனைவியர் மணவாழ்க்கையைக் குற்றமாகவும் புதுமை யாகவும் காண்பார் அல்லர். துலுக்கர் மதத்தின் ஆசிரியரான மகமது முனிவர் ஆண் பெண் பாலாரின் இயற்கைகளையும், அவர் தம் வாழ்க்கையின் இடர்ப்பாடுகளையும் ஆழ்ந்தாராய்ந் துணர்ந்தன்றோ ஓர் ஆண்மகன் ஒருவரிலிருந்து நால்வர் வரையில் மனைவியர் பலரை மணந்துகொள்ளலாம் என்று தாம் அருளிச் செய்த குரான்மறையில் ஒரு சிறந்த சட்டம் வகுத்தருளினார். அச்சட்டத்தின்படியே துலுக்கரில் ஆண் பாலார் தத்தம் பொருள் நிலைக்கு ஏற்ப மனைவியர் பலரை மணந்து வாழ்க்கையை இனிது நடத்தி வருகின்றனர். இங்ஙனம் பன்மனைவியருடனிருந்து வாழுந் துலுக்கரின் வாழ்க்கை இனிது நடைபெறுகின்றதோ இடர்ப்பட்டு நடைபெறு கின்றதோ என்பதனை நேரே சென்று ஆராய்ந்துகண்ட ஆங்கில ஆசிரியர் சிலர், அஃது இனிதாகவே நடைபெறு கின்றதென முடிவுகட்டி யிருக்கின்றனர். ஒரு கணவனுக்கு மனைவியர் பலர் இருப்பது அவர்களுள் வழக்கத்தில் வந்து விட்டமையால் ஒருவன் றன் மனைவிமார் தம்முட் பொறாமை சிறிதுமின்றி அன்புடன் ஒருவருக்கொருவர் உதவியாய் நின்று ஒத்து உயிர் வாழ்கின்றன ரென்றும், ஒரு

மனைவி மகவீன்று அதனைச் செவ்வனே வளர்த்துப் பெரிய பிள்ளையாக்குங்காறும் அவள் கணவன் ஒருவர்பின் னொருவராய் மற்றை மனைவியருடன் கூடி உறைந்து வாழ்க்கை செலுத்துதலின் மனைவியரும் அவர்தம் பிள்ளைகளுங் கணவருமெல்லாம் உடல்நல மனநலங்கள் நன்கு வாய்ந்து நீடு இனிது உயிர் வாழ்கின்றனரென்றுந், தமக்கு மனைவியர் பலர் இருத்தலின் அவரைவிட்டு வேறு மாதரை விழைந்து செல்லுங் கூடாவொழுக்கங் கணவர் பாற் சிறிதுங் காணப்படவில்லை யென்றும், ஆகவே பன்மனைவியர் மணவாழ்க்கை துலுக்கருள் நலந் தருவதா கவே இருக்கின்ற தன்றித் தீது தருவதாய் இல்லை யென்றும் அவ்வாங்கில ஆசிரியர்கள் தெளிவாக வரைந்திருக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/125&oldid=1592852" இலிருந்து மீள்விக்கப்பட்டது