உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

101

மற்றுந், கிறித்துமத சட்டப்படி ஒரு மனைவி உயிரோ டிருக்கையில் வேறு மனைவியரை மணவாத வெள்ளைக் காரரிலோ, ஏறக்குறைய ஒவ்வொரு கணவன் மாரும் பெரும் பாலும் வழுவிய ஒழுக்கமுடை யராய் மறைவிலே வைப்பாட்டி மார் இருவர் மூவர் நால்வரை மருவி வாழ்நாட் கழிக்கின்றன ரெனவும் அவர்களே ஆராய்ந்து கணக்கெடுத்து நுவல்கின்றனர். கிறித்துவர் துலுக்கரின் இவ்வாழ்க்கை வரலாறுகளை உற்று நோக்குங்கால், பன்மனைவியர் மணவாழ்க்கையினை இனியதாக ஏற்குந் துலுக்கமதக் கோட்பாடும் பண்டைத் தமிழர் மதக் கோட்பாடும் பெண்மக்கள் ஆண் மக்கட்குப் பல நலங் களைத் தருவனவாயிருத்தல் தெற்றெனப் புலனாகின்ற தன்றோ?

அற்றேல், ஒரு பெண்மகள் தான் காதலித்த ஒருவனை யன்றிப் பிறனொருவனைக் கனவினும் நினையாத மாண்பே கற்பொழுக்கமெனப் பழந்தமிழ் நூல்கள் வகுத்தாற்போல, ஓர் ஆண் மகனுந் தான் காதலித்த ஒருத்தியையன்றிப் பிறள் ஒருத்தியைக் கனவினும் நினையாத கற்பொழுக்கத்திற் குரியனென அந்நூல்கள் வகுத்துரை யாமை என்னையெனிற், கூறுதும்: ஒருவன் தன் காதன் மனையாளைத் தவிர மற்றை யொருத்தியை விரும்பாத மனத்திட்பம் உடையனாயிருந்தாலும், அவன்தன் மனையாள்பால் வைத்த காதல் மிகுதியால், அவள் மகப்பெறுதற்கு முன்னும் மகப்பெற்ற பின்னும் அவளை யடுத்தடுத்து மருவாதிரான். அவ்வாறவன் அவளொடு கூடி யொழுகுதலால் அவளுடம்பின் நலம் பழுதுபடுதல் மட்டுமே யன்றி, அவள் அடுத்தடுத்து ஈனுங் குழந்தைகளும் நோய் கொண்டு சிறிது காலத்தில் மடிந்து போகின்றன. அதனால் அவனது இல்லத்தில் நோயுங் கவலையுந் துன்பமுங் குடியா யிருக்கின்றன. இந் நிலைமையை ஆராய்ந்து பார்த்தே காதன் ம னயாளை மணந்தவனு மணந்தவனுங் கூட, அவளு அவளுடன் மட்டுமே கூடியிராமல், தன் பெற்றோரால் இளமை தொட்டே வளர்த்து அமர்த்தி வைக்கப்பட்ட காமக்கிழத்தியரோடுங் கூடி வாழ்க்கை செலுத்துமாறு பண்டைத் தமிழ்ச் சான்றோர் வகுத்து வைத்தனர். இங்ஙனம் இவர்கள் வகுத்து வைத்ததெல்லாம், பெண்பாலாரின் உடல்நல மனநலங்களைப் பாதுகாத்து, அவர் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும் அந்நலங்களுடையராய்த் திகழவும், அம்முகத்தால் ஆண்பாலாரும் நோயுங் கவலையுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/126&oldid=1592853" இலிருந்து மீள்விக்கப்பட்டது