உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் - 31

கூடா வொழுக்கமும் இன்றி இன்ப வாழ்க்கையில் நீடு வாழவுமே யாம் என்க. எனவே, தொல்லாசிரியர் பெண்பாலார்க்குக் கற்பொழுக்கத்தை வகுத்துக் கூறினாற்போல, ஆண் பாலார்க்கும் ஒரு மனைவியோ டிருக்குங் கற்பொழுக்கத்தை வகுத்துக் கூறாதது, இருபாலாரும் அவர்தம் மக்களும் இனிது வாழ்தற் பொருட்டே யாம் என்பது தானே போதரும். உலக வழக்கிலும் பெண்பாலார்க்குக் கற்பொழுக்கம் வேண்டப்படு கின்றதே யன்றி, ஆண்பாலார்க்கு அது வேண்டப்படாமை எவரும் அறிந்ததேயாம். அங்ஙனமாயினுந் தம் மனைவியரைக் கடந்த கூடா வொழுக்கம் எவர்க்கும் ஆகாமையும் எவரும் அறிந்ததே யாம். இவ்வாற்றாற், பழந்தமிழாசிரியர் ஆடவர்க்குக் கற் பொழுக்கம் வகுத்துரையாத நுட்பம் எவர்க்கும் இனிது விளங்கா நிற்கும் என்க.

L

அற்றேல், பெண்பாலாரும் ஆடவர் பலரைக் கணவராக மணந்து வாழ்தல் பொருத்த முடைத்தாமன்றோ? துரோபதை ஐவரைக் கணவராகக் கொண்டு வாழவில்லையா? நீலமலையில் உறையுந் தோடர்க்குள் ஒரு பெண் ஒரு குடும்பத்தில் உடன் பிறந்த ஆடவர் பலர்க்கும் மனையாளா யிருக்கின்றனளன்றோ? இமயமலையை யடுத்த திபேத்து தேயத்திலும் அங்ஙனமே ஒரு மாது ஒரு குடும் பத்தில் உடன் பிறந்த ஆடவர் பலரை மணந்து வாழ்கின் றனளன்றோ? இங்ஙனமே பழைய பிரித்தானியர்க் குள்ளும் அராபியர்க்குள்ளும் வேறு வகுப்பினர் சிலர்க் குள்ளும் ஒருத்தி ஆடவர் பலர்க்கு மனையாளாயிருந்த வரலாறுகள் அறியப்படு கின்றன. ஆதலால், தமிழர் மட்டும் ஒரு மங்கை ஒருவனைத் தவிரப் பிறனொருவனைக் கனவிலும் நினைதல் ஆகாதென வரையறை செய்ததென்னையெனிற், கூறுதும்.

பெரும்பாலும் ஆடவர் தம் மனைவிமாரின் உடல்நல மனநலங்களையும், அவர் வயிற்றிற் பிறக்குந் தம் பிள்ளை களின் உடல்நல மனநலங்களையுங் கருதிப் பாராமல், தமக்குக் காமவேட்கை எழுங் காலங்களி லெல்லாம் அவரை வலிந்து மருவும் இயல்பினரென்பதனை மேலே காட்டினாம். பூவாச் சிறுமிகளை மணக்கும் பார்ப்பனக் கணவன்மார், அச்சிறுமிகள் மங்கைப்பருவம் எய்தும் முன்னமே அவர் களை வலிந்துபற்றிப் புணர்ந்து அவர் உடம்பின் நலத்தைப் பழுதுபடுத்தி வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/127&oldid=1592854" இலிருந்து மீள்விக்கப்பட்டது