உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

103

இவர்கள்

-

உண்மை வரலாறுகளைப் புலமையிற் சிறந்த மேயோ என்னும் ஆங்கிலப் பெருமாட்டி யார் தாம் இயற்றிய "இந்தியத்தாய்” என்னும் நூலின் ஐந்தாம் இயலில் உண்மைச் சான்றுகள் பல கொண்டு உறுதிப்படுத்தியிருக்கின்றார். இவ்வாறு மங்கைப் பருவம் அடையாத பேதைச் சிறுமிகளையே - ஏழிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்டவர்கள் - வலிந்து பற்றிப் புணர்ந்து, வாழ்நாளெல்லாம் அவர்கள் நோய்வாய்ப்பட்டு மடியச்செய்யுங் காமப் பேய்களான ஆடவர், மங்கைப் பருவம் எய்திய ஒருத்தி மனைவி யென்னும் உரிமையிற் றமக்குக் கிடைத்துவிட்டால் அவளைச் சும்மா விடுவரோ சொன்மின்கள்! ஒரு மங்கையின் உடம்பைப் பழுதாக்க ஒரு கணவனே போதும்; அவளுக்கு மேலும் இன்னும் பலர் கணவராக அமர்ந்தால், அக் கணவன்மார் பலரால் அவ் வொருத்திக்கு நேரும் அலைக்கழிவினை எம்மொரு நாவால் எடுத்துரைத்தல் இயலுமோ சொன்மின்கள்! தோடர், திபேத்தியர் முதலான மக்கட் பிரிவினர் சிலர்க்குள் ஒருத்தி பலர்க்கு மனையாளாய் இருக்குந் தீய கொடிய வழக்கம் இருத்தலினாலே தான், அவர்க்குட் பெண்பாலார் தொகை வரவர அருகிப் போகின்றது! அவர் வயிற்றிற் பிறக்கும் மக்களும் மனநல உடல்நலங்கள் வாயாமற் குன்றிப் போகின்றனர்! மேலும், ஒருத்தி ஆடவர் பலர்க் மனை யாளாய் இருந்தாலும், அவள் அவருள் ஒரு கணவனிடத்தே தான் காதலன்பு பாராட்டுவள். துரோபதை ஐவர்க்கு மனையாளாயிருந்தும், அவள் அருச்சுனனிடத்தே தான் காதலன்பு பாராட்டின ளென்று நுவலப்படுகின்றனள். அதனால், ஒருத்திக்குக் கணவராய் அமர்ந்த பலருந் தமக்குட் பொறாமையும் பகைமையுங் கொண்டு கலாய்த்தலேயன்றி, அம்மாதினையும் பலவகையால் துன்புறுத்தா நிற்பர். இன்னும் அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளிலும் இஃது இன்னார்க்குப் பிறந்ததென்பது திட்டமாய் அறியப்படாமையால், அப் பிள்ளைகள்பால் அவள் கணவன்மார் பலரும் அன்பிலராயே யொழுகுவர். இவையே யன்றி இன்னும் பல அல்லல்களும், ஒரு பெண் ஆடவர் பலரை மணக்குங் குடும்பங்களில் உண்டாகும். ஆதலினாற்றான் இத்தகைய மணம் நாகரிமற்ற மக்கட் பிரிவினர் சிலர்க்குள் மட்டுங் காணப்படுகின்றது. நாகரிகம் எய்திய மக்கட் கூட்டத்தார் பலருள்ளுமோ ஒரு மகள் ஒருவனை மட்டும்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/128&oldid=1592855" இலிருந்து மீள்விக்கப்பட்டது