உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

-

  • மறைமலையம் – 31

மணந்து வாழும் வாழ்க்கையே நடைபெறுதல் எல்லாரும் அறிந்ததேயாம். ஆகவே, பண்டைத்தமிழ் மக்களும், அவர் தம் வாழ்க்கை வரலாறுகளைத் தழீஇ நூல்கள் இயற்றிய தமிழாசிரியர்களும் ஒரு மங்கை ஒருவனோடுறைந்து வாழும் கற்பொழுக்கத்தினையே வற்புறுத்தி வரலாயினர். அவர் வற்புறுத்திய கற்பொழுக்க வாழ்க்கையே இன்றுகாறும் இத் தமிழகத்தில் நிலைபெற்று வழங்கி வருதலை அறியா தார் யார்? இஞ்ஞான்றைத் தமிழ் மக்களின் மணவாழ்க்கை காதலன்பின் வழிபட்டு நடவாமையின், ஒரோவொருகாற் பிழைபட்டுச் சிதைவதாயிருப்பினும், அது பெரும்பாலும் பெண் பாலாரைக் கற்பொழுக்கத்தில் நிலைபெறுவித்தே வருதலின், அதனை மற்றை நாட்டவரும் பாராட்டிப் பேசுவதுமல்லாமல், அதனையே தாமுங் கைக்கொண்டு நடக்க விரும்புகின்றனர்; சிலர் பலர் கைக்கொண்டும் நடந்து வருகின்றனர் என்க.

அடிக்குறிப்பு

1.

Dr. John Cowan in his Science of New Life, P. 177.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/129&oldid=1592856" இலிருந்து மீள்விக்கப்பட்டது