உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

15. பின்முறை மணம்

இன்னும், பெண்பாலார் பெரும்பாலும் ஆண்பாலா ரைப் பார்க்கிலும் விரைவில் முதுமை யடைகின்றனர். நாற்பதுக்கும் நாற்பத்தைந்தாண்டுகட்கும் இடையில் மாதரிற் பலர் பூப்பு நிற்கப் பெறுகின்றார். பூப்பு நின்றபின் அவர்கள் கணவனை மருவுதற்கும் புதல்வரைப் பெறுதற்குந் தகுதியற்றவராகின்றார். நாற்பதாண்டுக்கு மேற்பட்டபின் மாதர் பலர்க்குப் புணர்ச்சி வேட்கையே இல்லையாய் ஒழிகின்றது. ஆனால், ஆண் பாலாரின் உடம்பு நிலையோ அத்தகையதாயில்லை. யாக்கை நோயற்ற நல்ல நிலைமையில் இருக்க, அறிவும் முயற்சியும் நன்கு வாய்ந்து நீண்டநாள் உயிரோடிருக்கும் ஆடவர் பலர்க்கு எழுபதாண்டுக்கு மேலும் புணர்ச்சி விருப்பும், மகளிரை மருவிப் புதல்வர்ப் பெறும் ஆற்றலும் இயற்கையாய்ப் பொருந்தி யிருத்தலையும், அத் தன்மையினார் எழுபதாண்டுக்கு மேலுந் திருமணஞ் செய்துகொண்டு வாழ்தலையும் இன்றைக்கும் பல இடங்களிற் பலரும் பார்க்கலாம். மேலும், பூப்பு நின்றபின் தன் காதன் மனையாளேயாயினும் அவளை அவள் காதலன் மருவுதலாகாதென அறிவுடையோர் கூறுமுரை பொருத்த முடையதாகவே காணப்படுகின்றது. ஏனென்றால், மாதர்க்குப் பூப்பு நின்றபின் பெரும்பாலுங் காமவேட்கை குறைந்து போவதுடன், அந்நிலையிற் புணர்ச்சி நிகழின் அவர்க்கும் அவர் தங் கணவர்க்கும் பலவகையான பலவகையான கொடிய நோய்களும் உண்டாகின்றன. ஆண் பெண் பாலாரின் இவ் வேறுபட்ட உடம்பின் நிலைகளை உற்றுநோக்கி ஆராய்ந்த நம் பண்டை ஆசிரியர், நாற்பத்தைந்தாண்டுகட்கு மேற்பட்ட தங் காதன் மனைவியரையும் ஆடவர் மருவுதல் தவிர்ந்து, வேறு மாதரை மணந்து கொண்டு வாழ்க்கை செலுத்தும் முறையினை ஏற்றுக் கொண்ட மை நமது பழைய தொல்காப்பிய நூலை ஆராய்தலாற் புலனாகின்றது. ஓர் ஆண்மகன் தான் முதலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/130&oldid=1592857" இலிருந்து மீள்விக்கப்பட்டது