உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மறைமலையம் - 31

L மணந்து கொண்ட மனைவி ‘தொன்முறை மனைவி' என்றும், பின்னர் மணந்து கொண்ட மனைவி ‘பின்முறை மனைவி’ என்றும் பெயர் பெறலானவை, தொல்காப்பியத்துக் கற்பியலிற் போந்த,

“பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினும்"

(31)

என்னும் நூற்பாவினால் இனிது விளங்கா நிற்கின்றது.

மேலுந் தனது இளமைக் காலத்தே தான் மணந்து கொண்ட காதன் மனைவி மக்களை ஈன்று மூத்துப் போன பின், அவளே இல்லறக் கடமைகளைத் தான் சாகுமட்டுந் தாங்கித் தொடர்ந்து செலுத்துமாறு வைத்து அவளை வருத்துதல் அவள் கணவனுக்கு அருளுடைமையாகாது. அம்முதுமைக் காலத்தே அவள் ஓய்ந்திருந்து இனிது காலங் கழிக்குமாறு, அவளுக்கு வேண்டும் உதவிகளைச் செய்து அவளை உவப்பித்தலே அவள் கணவனுக்கு இன்றியமை யாத கடமை யாகும். இதனை நன்குணர்ந்த நம் பண்டைத் தமிழ்மக்கள் தம் தொன்முறை மனைவிக்குந் தமக்கும் உதவியாம் பொருட்டுப், பின்முறை மனைவியாக மற்றுமொரு மாதை மணந்து, தம் தொன்முறை மனைவி யுடனிருந்தே வாழ்க்கை செலுத்தி வந்தமை அவர்தம் அருட்பான்மையினை இனிது புலப்படுத்தா நிற்கின்றது. இவ்வாறு நந்தமிழ் முதுமக்கள் தமக்குரிய பெண் பாலாரைப் பாதுகாக்கும் பொருட்டுப், பன் மனைவியரை மணந்தும் பின்முறை மனையாளாக மற்றுமொரு மங்கையை L மணந்தும் இல்வாழ்க்கை நடாத்திய வரலாறு களை உண்மையான் ஆராய்ந்து ‘நோக்க வல்லார்க்கு' அவர் தம் ஒழுகலாறு சிறிதேனுங் குற்றமுடைய தாகக் கருதப் படுதற்கு இடந்தராதாய், அவர்தம் பெண்பாலார்பால் வத்த மெய்யன்பினையும் பேரருளினையும் புலப்படக் காட்டுந் தன்மையதாய் நிற்றல் தெற்றென விளங்காநிற்கும். பிழை பட்ட உணர்ச்சியும் அழுக்காறும் அறியாமையுங் கொண்ட இஞ்ஞான்றை மாதர் ஆடவர் தமது வழுவான ஒழுகலாறே விழுமிதெனக் கருதி, உண்மை யருளொழுக் கத்திற் றலைநின்ற நம் பண்டைச் செந்தமிழ் மாந்தரின் ஒழுகலாற் றுக்குக் குறைகூறுதல் ஏதமாமென அறிதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/131&oldid=1592858" இலிருந்து மீள்விக்கப்பட்டது