உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

ம்

16. புதல்வர்ப் பேறு

இனிக், னிக், கற்பொழுக்க மாட்சி வாய்ந்த இல்வாழ்க்கை யின் சிறந்த பயனாவது நன்மக்களைப் பெற்று அவரைப் பல நலங்களும் வாய்ந்தவராக்கி, அவர் தமக்கும் பிறர்க்கும் பயன்பட்டொழுகச் செய்தலேயாமென்பது தமிழர்தம் அடுத்த கொள்கையாகும். அது,

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கல நன்மக்கட் பேறு”

என்று தெய்வத்

பெறப்படும்.

திருவள்ளுவர்

(குறள் 60)

விளம்புதலால் நன்கு

கற்பிற் சிறந்த காதன் மனையாளைப் பெற்று இல் லறத்தை நடத்துவானுக்கு நன்மக்கட்பேறு வாய்த்தலினும் விழுமியது பிறிதில்லை. தமிழர்தங் கோட்பாட்டின்படி இல்லறத்தை நடத்துவான் ஒருவனுக்கு முதற்கண் வேண்டற்பாலன தன்மனைவியின் காதலுங் கற்புமேயாகும். அதனையடுத்து அவனுக்கு வேண்டற்பாலது நன்மக்கட் பேறேயாம். மற்று, ஆரியர்தங் கோட்பாட்டின்படியோ மனைவாழ்க்கையில் இருப்பானுக்கு முதற்கண் வேண்டற் பாலது புதல்வர்ப் பேறேயாம்; புதல்வரைப் பெறுதற் பொருட்டுத் தன் மனைவி கற்பொழுக்கத்திற் பிறழ்ந்து நடத்தலும் அவள் கணவனுக்கு

ன்பாடேயாம். மேலும், புதல்வர்ப் பேற்றின் பொருட்டு ஒரு பெண்ணையோ அல்லது ஒன்றின் மேற்பட்ட பெண்களையோ மணத்தல் வேண்டுமென்று ஆரியர் கூறுவதல்லாற், காதலன்பின் பொருட்டும் அன்பினையும் அறத்தினையும் வளர்த்தற் பொருட்டும் ஒரு மங்கையுடன் கூடி இல்வாழ்க்கையை நடத்தல் வேண்டுமென்று அவர் கூறுவதில்லை. மனை வாழ்க்கையைப் பற்றிய கோட்பாட்டில் தமிழர் கொண்ட கருத்தும் ஆரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/132&oldid=1592859" இலிருந்து மீள்விக்கப்பட்டது