உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் - 31

காண்ட கருத்தும் இங்ஙனந் தம்முட் பெரிதும் வேறுபட்டு நிற்றல் நினைவிற் பதிக்கற்பாற்று.

னி, மனைவாழ்க்கையைத் தமக்கும் பிறர்க்கும் பயன் றரும் முறையில் நன்கு நடத்தி நன்மக்களைப் பெற்றவர் அம்மக்களுக்குச் செய்யும் உதவியாவது அம்மக்களைக் கல்வியிலுங் கலைத்துறையிலுந் தேர்ச்சி பெற்று விளங்கச் செய்தலே யாகுமன்றி, அவர்க்குச் செல்வப் பொருளைச் சேர்த்து வைத்தலாக மாட்டாதென்றே பண்டைத் தமிழ் மக்கள் கருதினர். அது,

‘தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்’

(குறள் 67)

என்னுந் திருவள்ளுவர் திருக்குறளாலும், திருவள்ளுவர் காலத்தவரான பொன்முடியார் என்னுஞ் செந்தமிழ்ப் புலமைச் சேயிழையார்,

“ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே

எனக் கூறிய செய்யுண் மொழியாலும், இவற்றிற்கு விளக்கவுரை போலெழுந்த,

“வைப்புழிக் கோட்படா, வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர்செறின் வௌவார், எச்ச மெனவொருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற"

என்னும் நாலடியார்

செய்யுளாலும் நன்கறியப்படும். இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலேயே, பெற்றோர் தம்மக்களைக் கல்வியில் வல்லராக்கி, அவர் அக்கல்வியின் உதவி கொண்டு தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருளை, நிலத்தினும் நீரினுஞ் சென்று ஈட்டிக் கொள்ள ஏவுவரென்பதும், அவர்தம் புதல் வரும் அவரேவியவாறே நிலமும் நீரும் கடந்து பல தேயங்கள் போய்ச் சேர்ந்து பல நன்முயற்சி களைச் செய்து பொருள் ஈட்டித் திரும்புவ ரென்பது அவ்வாசிரியர் அருளிச் செய்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/133&oldid=1592860" இலிருந்து மீள்விக்கப்பட்டது