உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

“மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்

இழைத்த வொண்பொருண் முடியவும் பிரிவே’

109

என்னும் நூற்பாவால் இனிது விளங்காநிற்கும். தந்தை யும் அவன் முன்னோருந் தேடிய பொருள் கைக்கொண்டு தன் இல்லற வாழ்க்கையை நடாத்துததல் கலைவல்ல ஓர் ஆண்மகனுக்கு ஆணமை

அன்மையின், அவன் அவரது பொருளை அவாவானாய்ச் சேய பல தேயங்கள் சென்றா யினும் பொருள் தொகுத்தலையே மேற்கொண்டொழு கினான். இஃது ஆசிரியர் நக்கீரனார் இறையனாரகப் பொருள் என்னும் நூலின்,

“ஓதல் காவல் பகை தணி வினையே வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென் றாங்க வாறே அவ்வயிற் பிரிவே"

என்னும் நூற்பாவுரையில்,

“தன்முதுகுரவராற் படைக்கப்பட்ட பலவேறு வகைப் பட்ட பொருளெல்லாங் கிடந்ததுமன்; அதுகொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை அன்றெனத் தனது தாளாற்றலாற் படைத்த பொருள் கொண்டு வழங்கிவாழ் தற்குப் பிரியுமென்பது"

என்று வரைந்த விளக்கவுரைப் பகுதியால் தெற்றென வுணரப்படும். படவே, பண்டை நாளிலிருந்த தமிழ்மக்கள் தம் பிள்ளைகளைச் செவ்வனே வளர்த்து, அவர் கல்வியிலுங் கைத்தொழிலிலும் வாணிகத்திலுந் தேர்ச்சி பெறுமளவே தமது பொருளைச் செலவு செய்து, அவர் அவற்றிற் றேர்ச்சி பெற்றுத், தமது முயற்சியாற் பொருள்தேட வல்லரானபின் தமது செல்வத்தைப் பல அறத்துறைகளிற் பயன்படுத்தி உலகத்திற்கு நன்மை பல செய்து வந்தனரென்பது புலனா கின்றது. அஞ்ஞான்றைத் தமிழ்மக்கள் தம் புதல்வர் புதல்வியர்க்குச் செல்வப் பொருளைத் தொகுத்து வைத்த லிலேயே முனைந்து நில்லாது, உலகத்துயிர்கட்கு நன்றாற்று தலிலும் முனைந்து நின்றமையால், வறியோர்க்கு உறையுளும், கல்வி பயில்வார்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/134&oldid=1592862" இலிருந்து மீள்விக்கப்பட்டது