உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

  • மறைமலையம் - 31

உணவும், அறுவகைச் சமயத்தார்க்கு உண்டியும், ஆவிற்கு வாயுறையும், சிறைப் பட்டார்க்குச் சோறும் வழங்கலும், ஐயமிடுதலும்; குழந்தைக்குத் தின்பண்டமும், சோறுங் கொடுத்தலும்; மகப் பெறுவித்தலும், மகவளர்த்தலும், மகப்பால் தருதலும், அறவைப்பிணஞ் சுடுதலும், அற்றார்க்கு ஆடைகொடுத் தலும், வண்ணாரால் ஆடை ஒலிப்பித்துக் கொடுத்தலும், மயிர்வினைஞரால் வறியார்க்கு மயிர்

அகற்றலும், திரு மணஞ் செய்து வைத்தலும், பூண்நூல் பூட்டு வித்தலும், நோய்க்கு மருந்து கொடுத்தலும், முகம்பார்க்கக் கண்ணாடி அமைத்தலும், காதுவளர்க்க ஏழைமகளிர்க்கு ஓலை தருதலும், கண்ணுக்கு மருந்து இடுதலும், தலைக்கு எண்ணெய் கொடுத்தலும், காமவின்பத்திற்குப் பொது மகளிரைச் சேர்த்தலும், வெற்றிலைக்குச் சுண்ணந்தருதலும், பிறர்துயர் காத்தலும்; தண்ணீர்ப்பந்தல், திருமடம், தடாகம், இளமரக்கா அமைத்தலும்; ஆவுரிஞ்சுதறி ஆங்காங்கு நடுதலும், ஆவுக்குக் காளை விடுதலும், விலை கொடுத்துக் கொலைக்குச் செல்லும் ஆடுமாடுகளை வாங்குதலும் ஆகிய முப்பத்திரண்டு அறங்களை யுஞ் செய்து வந்தார்களென்பது பழைய திவாகர நிகண்டால் நன்கு விளங்குகின்றது. அவ்வாறவர்கள் செய்து வந்த அறங்களின் அடையாளங்கள் இஞ்ஞான்றும் ஆங்காங்குக் காணப்படுதலுடன், அறஞ் செயும் அம்மரபு பிழையாமல் அவ்வறங்களிற் சில பல செய்யுந் தமிழர் சிலரும் இடையிடையே இந்நாட்டில் இன்னுந் திகழ்கின்றனர்.

இங்ஙனம் பண்டைநாளில் இருந்த தமிழ்த்தாய் தந்தை யர்கள் தாம் பெற்ற தம் மக்களைக் கல்வியிலுங் கலைத் துறைகளிலுந் தேர்ச்சிபெறச் செய்து, அவர் தமது தேட்டங் கொண்டே தமது வாழ்க்கையினை நடாத்திக் கொள்ளுமாறு கற்பித்துத், தாந் தேடிய பொருளை முப்பத் திரண்டறங் களுக்கும் பயன்படுத்தி வந்தமையினாலேயே, முற்காலத்தில் நஞ் செந்தமிழ் நாட்டிலிருந்த மக்கள் கல்வி யிலுங் கலைத் துறைளிலுந் திறம்பெற்றுத் தமது ஆள் வினையால் திரை கடலோடியுந் திரண்ட பொருள் ஈட்டித், தாம் நன்கு வாழ்ந்து வந்ததுமல்லாமல், மற்றையோரும் நன்குவாழப் பேருதவிபுரிந்து வந்தனர். மற்று, இந்நாளிலோ பெற்றோர்கள் எல்லாருந் தம்மக்களுக்குச் செல்வப்பொருள் சேர்த்துவைத்தலையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/135&oldid=1592863" இலிருந்து மீள்விக்கப்பட்டது