உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

-

மறைமலையம் - 31

அழகிய ஒரு தாமரை மலரையேனும், அழகில்லா ஓர் எருக்க மலரையேனும் நாம் காணநேர்ந்தால் அவை யிரண்டின் வடிவங்கள் உடனே நமதறிவின்கட் பதிந்து தோன்றுகின்றன; ஆனால், அழகில்லா எருக்க மலரின் அருவருப்பு நமதறிவின்கட் டோன்றிய அதனுருவத்திற் காணப்படு கின்றிலது. இங்ஙனமே இன்னும் எத்தனை அருவருப்பான 6 பொருளுருவங்கள் நமதுள்ளத்தில் அறிவுருவங்களாய்த் தோன்றினாலும், அவற்றின்கண் உள்ள அருவருப்புகள் அவ்வறிவுருவங்களில் ஏறுவதில்லை யென்பதையும், பொருளுருவங்களின் அரு வருப்புகள் நமது நினைவின் சேர்க்கையால் நமதுள்ளத்தே தோன்றி நமக்குச் சிறிது துன்பத்தைத் தந்தாலும், நமதறிவின் கண் அவ்வரு வருப்புகள் ஏறுவதில்லை யென்பதையும் அனைவரும் கருத்திற் பதித்தல் வேண்டும்.

இனிப், பொருளுருவங்களிலுஞ் சில பருப்பொருள் வடிவுகளில் மட்டுமே வெறுக்கத் தக்க சில வாலாமைகள் காணப்படுகின்றன; ஆனாலும், அவை தாமும் நுண் பொருளாக மாறிவிட்டால் அந்நிலையில் அவ்வருவருப்பு கள் அவற்றின்கட் காணப்படுவதில்லை. மலக் கும்பியுஞ் சேறுஞ் சகதியும் நெருப்பின் சேர்க்கையால் நுண்ணிய நிலையை அடைந்த வுடனே, அவற்றின்கண் இருந்த முடை நாற்றமும் அருவருப்பும் ல்லையாய் ஒழிகின்றமையே இதற்குச் சான்றாம்.

இனிப், பருப்பொருள்களிலுந் தூயவடிவு வாய்ந் தனவுந், தூவாவடிவு வாய்ந்தனவுமாக இருவேறு வகைகள் இருக்கின்றன. அழகிய ஓர் ஆண்மகனையோ அல்லதொரு பெண்மகளையோ ஒப்பச்செய்த பொற்பாவை வெள்ளிப் பாவைகளில், அவ் வாண்பெண்ணிடத்துள்ள மலம் முடை நாற்றம், முதலான உவர்ப்புகள் காணப்படுவதில்லை யன்றோ? செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம் முதலியவற்றிற் சமைத்த பாவைகளில் உண்டாகுங் களிம்புந் துருவும், பொன், வெள்ளியிற் சமைத்த பாவைகளில் உண்டாவ துண்டா? இல்லையே. இன்னுஞ் சேற்றிலுஞ் சகதியிலுங் கும்பியிலும் உண்டாகும் முடைநாற்றம், அவற்றின்கண் முளைத்து முறுக்கவிழ்ந்த தாமரை மலரிலும் அல்லி மலரிலும் உண்டாவதுண்டா? இல்லையே. சேறுஞ் சகதியும் பார்ப்பதற்கும் மோப்பதற்கும் மிக்கதோர் அரு வருப்பினைத் தருவனவாயிருக்க, அவற்றின்கட் டோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/161&oldid=1592892" இலிருந்து மீள்விக்கப்பட்டது