உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் - 31

நன்காராய்ந் துணராமையாலன்றோ, பாண்டியன் மனைவியின் கூந்தல் இயற்கை மணம் பொருந்தியதாய்க் கமழா நிற்கவும், அதனை யறியாமல் அது பூவின் சேர்க்கை யாலுண்டான செயற்கை மணமேயென அழிவழக்குப் பேசி இழுக்கினார்.

ஆகவே, உருவப் பொருள்களெல்லாம் வெறுக்கத் தக்க அருவருப்புகள் உடையனவாகுமெனக் கரைதல், நுணுகி விரிந்த ஆராய்ச்சியறிவில்லார் செயலேயாதல் தெளியப் படும். பருப் பொருள்களிலேயே பொன் வெள்ளி முதலியன வாலாமை சிறிதுமின்றிச் சுடரொளி துளும்பு வனவாயிருக் கையில், நுண்ணிய பொருள்களிலெல்லாம் நுண்ணியதாய் அறிவொளி வடிவாய்த் திகழும் இறைவன்றன் ஆண் பெண் ணுருவில் வெறுக்கத்தக்க வாலாமை சிறிதேனும் உளதாகுமோ? உணர்ந்து பார்மின்கள்! மண்ணிலும் ஒரோவோரிடத்து வாலாமை உண்டு; நீரிலும் ஒரோவிடத்து வாலாமை உண்டு; ஆனாற், கதிரவன் சுடரொளியிற் சிறிதேனும் வாலாமை யுண்டென்று எவரேனுந் துணிந்து சொல்வரா? சொல்லார், அது போலவே, இறைவனாகிய கதிரவன்றன் அளவிலா ஒளியுருவில் எத்தகைய வாலாமையும் அணுகமாட்டாதென எல்லாருங் கடைப்பிடித் துணர்தல் வேண்டும்.

ஆகவே, இறைவன்றன், அம்மையப்பர் உரு வாலாமை சிறிதுமில்லா அருளொளி வடிவினதாமென்பது நிறுவப் பட்டமையின், நம் பண்டைத் தமிழ்மக்கள் இறைவனை அம்மையப்ப ருருவில் வைத்து வணங்கி வந்ததும் வருவதுஞ் சாலவும் பொருத்தமுடையவாதல் அறிவுடையார்க் கெல்லாந் தெற்றென விளங்கா நிற்கும்.

இனி, நம் முதுமக்கள் முழுமுதற் கடவுளின் அம்மை யப்பர் வடிவினை, நம ஐம்பொறிகளுக்குப் புலனாகும் இயற் கைப் பொருள்களில் எதன்கண்ணே தெளியக் கண்டு, அதனை வணங்கி வரலாயினரென்பது ஆராயற்பாற்று, உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் உற்று நோக்க நோக்க, அவற்றின்கட் புலனாய்த் தோன்றும் வியத்தகும் அமைப்புகளின் திறத்தை உன்னித்து நினைக்க நினைக்க, இவ்வமைப்புகளை உண்டாக்கத் தக்க பேரறிவும் பேராற்றலும், பகுத்தறிவில்லாச் சிற்றுயிர்களிலாயினுஞ் சிற்றறிவேயுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/163&oldid=1592894" இலிருந்து மீள்விக்கப்பட்டது