உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

139

னக்

மக்களிலாயினும் அச்சிற்றறிவு தானு மில்லா இயற்கைப் பொருள்களிலாயினும் ஒருவாற்றாலுங் காணப்படாமையின், அப்பேரறிவு பேராற்றல்களையுடைய ஒரு பேருயிர் கட்டாயம் உண்டென்னும் எண்ணம், மிக மழுங்கிய அறிவினரான கானவர் முதல் மிக விளங்கிய அறிவினரான சான்றோர் ஈறான எல்லா மாந்தருள்ளத்தும் எதனாலுந் தடைசெய்யப்படாமல் தானாகத் தோன்றிய படியாகவே விளங்கா நிற்கின்றது. இவ்வாறு முழுமுதற் கடவுள் ஒருவர் உண்டெ உண் கடவுளிருப்பைப் பற்றிக் கட்டாயமாய்த் தோன்றும் ஓர் எண்ணந் தம் முள்ளத்தே தோன்றப் பெற்றளவில் மக்கள் மனவமைதி யுடையவரா யிருக்கவில்லை. உலகத்திற்குப் பேருதவிகளைச் செய்யும் அருளாளரான ஒரு சான்றோர் உயிரோடிருக்கின்றார் என்று தெரிந்தால், அவரைப் போய்க் காணவும் அவரை வணங்கவும் அவரை நீடு வாழ்கவென வாழ்த்தவும் அவர் கூறும் அறிவுரைகளைக் கேட்கவும் அவர்க்கு எல்லாச் சிறப்புகளுஞ் செய்து பார்த்து மகிழவும் நாம் எவ்வளவு அவாவும் எவ்வளவு முயற்சியும் வாய்ந்தவர்களா யிருக் கின்றோம்! இது மக்கள் எல்லார்க்குமுள்ள இயற்கை விருப்பமாய் இருத்தலால், எல்லாம்வல்ல ஒரு முழுமுதற் கடவுள் இருக்கின்றார் என்று தெளிந்தவளவானே, அக் கட வுளை நேரே கண்ணாரக் காணவும், அவரை வணங்கவும், அவரது பேரருளை வாழ்த்தவும், அவரருளுரை களைக் கேட்கவும் அவரை அழகுற ஒப்பனை செய்து பார்த்துக் களிக்கவும் மக்களனைவரும் பெரிதும் விழைந்து அதற்காக அல்லும் பகலும் எவ்வளவோ பாடுபட்டு வருகின்றார்கள். அங்ஙனம் உண்மைப் பெருங்காதல் கொண்டு கடவுளைக் காணப் பெரும்பாடு பட்டுவரும் மக்களிற் கடவுளைக் கண்ட சிற்சிலர், ஆங்காங்குத் தோன்றித், தாங்கண்ட அப்பேரின்பக் காட்சியை, அதனைக் காணாது அலமரும் மக்களுக்கு, அவர் மாட்டு வைத்த பேரிரக்கத்தாற், காட்டியபடியாகவே பேருதவி செய்திருக் கின்றார்கள். அவருள் நஞ் செந்தமிழ் நாட்டில் இடை யிடையே யே தோன்றிய சான்றோர் இறைவனைத் தாம் நேரே கண்டு நம்மனோர்க்குங் காட்டியிருக்கும் காட்டியிருக்கும் உண்மையை ஈண்டெடுத்து விளக்குவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/164&oldid=1592896" இலிருந்து மீள்விக்கப்பட்டது