உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

19. ஒளிவடிவே கடவுள் வடிவு

இனி, இத்துணைப் பேரொளியுருவினனாகிய இறைவன், சிற்றுயிர்களாகிய நமக்குத் தன்னை விளங்கக் காட்டாமல் மறைந்திருப்பனாயின், அவனை அறியும் ஆற்றல் நம்மனோர்க்குச் சிறிதும் இல்லையே! ஒளிமுன் நின்றே ஒளியின் இயற்கையுங் கடவுளினியற்கையும் ஒன்றென் றறிய மாட்டாப் பேதைகளான நாம், ஒளிமுன் நில்லாமல் இருளிலேயே நின்று காலங் கழிக்கும் படி நேருமானால், அவ்வொளியினைக் காணமாட்டுவமோ, அங்ஙனம் ஒளியென்பது ஒன்றுண்டென்றுதான் அறிய மாட்டுவமோ? ஒரு சிறிதும் மாட்டோமன்றோ? ஆதலால், எல்லா அருளும் எல்லா இரக்கமும் ஒருங்குடைய முதல்வன் தன்னை என்றும் ஒளிவடிவில் வைத்தே ஏழை யறிவினராகிய எமக்குத் தன்னைக் காட்டிய வண்ணமாய்த் திகழா நிற்கின்றான். ஒளிவடிவு ஒளியுடைப் பொருளின் வாயிலாக விளங்கித் தோன்றுமேயல்லாமல், ஒளி இல்லாத கல் மண்நீர் என்னும் பொருள்களிலும், உருவேயில்லாத காற்றிலும் விளங்கித் தோன்றாது. அற்றேல், ஒளியேயில்லாத விளக்குத் திரியிலுஞ், சிகிமுகிக் கல்லிலுங் கட்டையிலும், இரும்புக்கம்பி செப்புக்கம்பி முதலியவை களிலும் ஒளியுருவு புலனாய்த் தோன்றுதல் என்னையெனின்; ஒளியில்லா அந்தத் திரி முதலியவைகளை ஒரு பற்றுக் கோடாக் கொண்டு அஃது அவைகளிற் செயற்கை யாய்த் தோன்று கின்றதே யன்றிப், பகலவனில் அஃது என்றும் இயற்கை யாய்த் தோன்றி விளங்குமாறுபோல் அவற்றின்கண் அஃது இயற்கையாய்த் தோன்றுகின்றிலது என்க.

ன்னும், இறைவன் உருவமாயே இருப்பவனும் அல்லன்; ன்றி அருவமாயே யிருப்பவனும் அல்லன், உருவமாயே இருப்பன் எனக்கொள்ளின், அருவமாதற்குரிய ஆற்றல் அவன்பால் இல்லையென்றும், அருவமாய் நின்று எத்தகைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/184&oldid=1592917" இலிருந்து மீள்விக்கப்பட்டது