உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

  • மறைமலையம் - 31

இன்றுகாறும் அவை தமக்கு வழிபாடாற்றி வருகின்றனர். ஆகவே, சைவரைப் பகைத்துக் கடவுள் இல்லையெனக் கட்டுரைத்து வந்த பிற்றை ஞான்றைப் பௌத்தர் சமணருங் கூட க் கடைப்படியாகக் கடவுள் வணக்கத்தில் வந்து மனஆறுதல் பெற்று நிற்றல் எவர்க்கும் இனிது விளங்காநிற்கும். இப்போது சில ஆண்டுகளாகப் புதிது தோன்றி, ஆரியக் குறும்பை அடக்கித் தமிழர்க்கு நன்மை செய்வார் போல் ஆரவாரம் புரியும் ஒரு சிறு கூட்டத்தார், பண்டைத் தமிழரின் மரபிற் றோன்றி அவர்க்குரிய பிறப்பு இறப்பு இல்லா ஒரே முழுமுதற் கடவுளின் ஒளியுருவ வழிபாட்டில் உறைத்து நிற்பவரான சைவசமயத் தவரையுஞ் சைவசமய ஆசிரியரையும் அவர் அருளிச் செய்த ஒப்புயர்வில்லாத் தேவார திருவாசகம் முதலான செந்தமிழ் மாமறைகளையும் வாய் கூசா திகழ்ந்து ஆரவாரஞ் செய்து வருகின்றனர். இவர்களோ இவர்க்குப் பின் இவர்தங் கால்வழியில் வருவாரோ தாங் கடவுள் வணக்கத்தைக் கைவிட மாட்டாமை யுணர்ந்து, சிறிது காலத்தில் தத்தந் தலைவரையே, பௌத்தர் சமணரைப் போற், கடவுளாக்கி அவரை வணங்குதலும் வாழ்த்துதலுஞ் செய்யா நிற்பர். சிற்றறிவுடையராய்ப் பிறப்பிறப்பில் பட்டுழலும் மக்களை எத்துணை தான் கடவுளாக உயர்த்தி வழிபடினும், அவர்கள் கடவுளாய் விடுவரோ? கல் லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? மின்னுவவெல்லாம் பொன்னாமோ? ஆகையால், இறைவ னில்லையென எடுப்புடன் பேசுவார் எவருந், தாங் கவலை யிலும் நோயிலும் வறுமையிலும் துன்பத்திலுஞ் சிக்குண்டு நையுங்காலுஞ், சாகப்போகுந் தறுவாயிலும் இறைவன் நம்பிக்கை வரப் பெற்று, அதற்குமுன் தாஞ்செய் பெரும் பிழையினை யுணர்ந்து நெஞ்சம் இரங்கா நிற்பரென்பது திண்ணம், அது நிற்க.

1.

அடிக்குறிப்புகள்

"Every artist knows how he can make a scene before his eyes appear warmer or colder in colour, according to the way he sets his attention. If for warm, he soon begins to see the red color start out of everything; if for cold, the blue.” p.425. The principles of Psychology, by Prof. W. James. Vol.1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/213&oldid=1592947" இலிருந்து மீள்விக்கப்பட்டது